Skip to main content

செங்கல்பட்டில் லேசான நிலநடுக்கம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mild earthquake in Chengalpattu

செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

செங்கல்பட்டு பகுதியை மையமாக கொண்டு மிகவும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரியாக காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதே சமயம் தற்போது கர்நாடகா மாநிலம் விஜயபுராவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டு இருப்பதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அண்மை காலமாக வடமாநிலங்களில் ஏற்பட்டிருந்த நில அதிர்வுகள் தற்போது, தென்மாநிலங்களான தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, கர்நாடகாவின் விஜயபுரா ஆகிய இடங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பாலியல் தொந்தரவு; பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது!

Published on 23/06/2024 | Edited on 23/06/2024
Brajwal Revanna suraj revanna brother arrested

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதாவது தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணாவை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி. ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலை வாங்கித்தருவது தொடர்பாக அவரை அணுகிய போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஊழியர் அளித்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே சூரஜ் ரேவண்ணாவின் சகோதரர் பிரஜ்வல் பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். அவரது தந்தை ரேவண்ணா பெண் கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரஜ் ரேவண்ணாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, 342, 506 இன் கீழ் ஹோலேநரசிபுரா காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. சூரஜ் ரேவண்ணா கடந்த 16 ஆம் தேதி (16.06.2024) ஹாசன் மாவட்டத்தில் உள்ள கன்னிகடா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார்தாரர் கூறியுள்ளார். இந்த கைது சம்பவம் தொடர்பாக ஹாசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முகமது சுஜிதா கூறுகையில், "மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் சட்டமேலவை உறுப்பினரும். எச்.டி ரேவண்ணாவின் மகனுமான சூரஜ் ரேவண்ணாவை போலீசார் கைது செய்தனர்" என தெரிவித்துள்ளார். 

Next Story

கிரிவலம் முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய கர்நாடக பக்தர்கள் உயிரிழப்பு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
devotees who returned to town after completing Girivalam lost their lives

திருவண்ணாமலை அணைக்கரை ரிங் ரோடு அருகில் கர்நாடகா பதிவெண்  கொண்ட காரில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் முடித்துவிட்டு பெங்களூர் நோக்கி சென்றனர். திருவண்ணாமலை அடுத்த நல்லவன் பாளையத்திலிருந்து கீழ்நாத்தூர் நோக்கி இரண்டு சக்கர வாகனத்தில் இரண்டு வாலிபர்கள் திருவண்ணாமலை நகருக்குள் சென்றனர். 

அணைக்கரை ரிங் ரோடு அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே, முருகன் வயது 36 தந்தை பெயர் ராஜமாணிக்கம், சே அகரம் செங்கம் தாலுக்கா, விஜயகாந்த் வயது 32 தந்தை பெயர் நாராயணன் கீழாத்தூர் ஆகிய இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

விபத்து நடந்தது நேற்று இரவு பௌர்ணமி கிரிவலம் என்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரத்துக்குள் வரும் 9 சாலைகளும் பெரும் சிரமத்தை சந்தித்தனர். விபத்தால் புறவழிச்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூட்டத்தால் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. அதற்குள் இருவரும் இறந்துவிட்டனர். இறந்த உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மேற்கு காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க தொடங்கினர். விபத்து நடந்த உடன் காரில் இருந்த டிரைவர் தப்பி ஓடியிருந்தார். விபத்து நடத்திய காரின் ஓட்டுநர் யார்? அவர் எங்கே சென்றார் என்ற கோணத்தில் காவல் துறையினர் தேடி வருகின்றார்கள். காரின் உரிமையாளரை வரவைத்து விசாரணை நடத்துகின்றனர்.