Published on 31/01/2024 | Edited on 31/01/2024

சமீப காலமாக பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், அண்மையில், தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை மற்றும் மதுரை மாவட்ட ஐஜி அதிகாரிகள் 2 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்த கண்ணன், மதுரை தெற்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல், மதுரை தெற்கு மண்டல ஐஜியாக பொறுப்பு வகித்து வந்த கே.எஸ்.நரேந்திர நாயர், சென்னை வடக்கு மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.