ஜெயலலிதா பிறந்த நாளில் அவரது சிலையை(?) அதிமுக தலைமையகத்தில் திறந்து வைத்துவிட்டதோடு ஜெ.புகழ் பாடுவதை நிறுத்துக்கொண்டனர் எடப்பாடி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள். மாறாக, இன்று மாலை கலைவாணர் அரங்கில் மகளிர்க்கான மானிய விலை ஸ்கூட்டி திட்டத்தை துவக்கி வைக்க வரும் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி செய்திருக்கும் ஏற்பாடுகள் அடேங்கப்பா ரகமாக இருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து ஐ.என்.எஸ். ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்திறங்குகிறார் மோடி. அங்கிருந்து நிகழ்ச்சி நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு கார் மூலம் பயணம். ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கலைவாணர் அரங்கத்துக்கு செல்லும் மோடிக்கு வழியெங்கும் தாரை தப்பட்டையுடன் மேளதாளங்கள் முழங்க ஏக வரவேற்புக்கொடுக்கின்றனர். வழி நெடுக அதிமுக தொண்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தைக்காட்டி மோடியை அசத்துவதற்காக பல மாவட்டங்களிலிருந்தும் ஆட்களை இறக்குமதி செய்திருக்கிறது எடப்பாடி தரப்பு. முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கார்டனிலிருந்து ஜெயலலிதா புறப்பட்டால் எந்தளவுக்கு அமர்க்களமாக வரவேற்பு ஏற்பாடுகளை அதிமுக பெருந்தலைகள் செய்வார்களோ அதே போன்று அதகளப்படித்தியுள்ளனர். அதைப்பார்த்து ஆதங்கப்படும் ஜெயலலிதா விசுவாசிகள்,
அதிமுக தொண்டர் தலையில் பா.ஜ.க தொப்பியை அணிவித்து
பிரதமர் மோடியை வரவேற்க நிற்கிறார்.
" ஜெயலலிதா பிறந்த நாளையே மறக்கடிக்க செய்துவிட்டார் மோடி. அந்தளவுக்கு மோடி மோகம் எடப்பாடியைப் பிடித்து ஆட்டுகிறது. இப்படியே போனால் அதிமுகவின் அகில இந்திய தலைவராக மோடியை எடப்பாடி அறிவித்தாலும் அறிவித்துவிடுவார்" என புலம்புகின்றனர்.
- இளையர்.