
நடிகர் கமல்ஹாசன் வருகிற 21-ந் தேதி தனது புதிய கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி, அன்றைய தினமே அவர் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்ய உள்ளார். 21-ந் தேதி (புதன்கிழமை) காலை ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை தொடங்கும் கமல்ஹாசன் மதுரையில் 21-ந்தேதி மாலை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து மதுரை நோக்கி தொண்டர்களை திரட்டும் ஏற்பாடுகளையும் அவர்கள் ஓசையின்றி செய்து வருகிறார்கள். தனது அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன்பு சிலரை நேரில் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு ரஜினியை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கமல்,
ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது. அரசியல் ரீதியானது அல்ல. அரசியல் பயணத்திற்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து சொல்லிவிட்டு செல்கிறேன். அவர்களிடம் வாழ்த்து பெறுகிறேன். எனது அரசியல் பயணத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது தவறு. இவ்வாறு கூறினார்.
படம்: எஸ்.பி.சுந்தர்