Published on 10/07/2018 | Edited on 10/07/2018

தமிழகத்தில் மாவட்ட கலெக்டராக இருப்பவர்களில் ஐந்து அல்லது ஆறு பேர்களை தவிர மற்றவர்கள் ஐந்து வருடங்களாக கலெக்டராக நீடிக்கிறார்கள். நீண்ட வருடங்களாக கலெக்டராக இருப்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
இதனை அறிந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். விரைவில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விரைவில் மாற்றம் ஏற்பட உள்ளது.
இந்த தகவலை அறிந்து கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பவர் புல்லான துறைகளில் நுழைவதற்கு ஆட்சியளர்களின் தயவை நாடிக்கொண்டிருக்கிறார்கள்.