Skip to main content

மாஃபியாக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது கர்நாடக காங்கிரஸ்! - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Published on 11/05/2018 | Edited on 12/05/2018

வரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் தமிழக பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன். கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக சமூக வலைதள பொறுப்பாளராக பணியாற்றிய அவர், தமிழக தலைவர்களின் பிரச்சார சுற்றுப் பயண ஏற்பாடுகள், தமிழக கட்சி நிர்வாகிகளை பல்வேறு இடங்களுக்கு பிரச்சாரத்திற்கு பிரித்து அனுப்புவது போன்ற பணிகளையும் மேற்கொண்டிருந்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் கர்நாடக தேர்தல் களம் அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

 

vanathisinivasan

 

 


''பாஜகவுக்கு அடுத்த வெற்றி முகம் கொடுப்பது கர்நாடகா மாநிலம். கடந்த 5 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் அம்மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் பின் தங்கியிருப்பது பற்றியும், விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பது பற்றியும், ஏற்கனவே எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் நடந்த பணிகளையும் மக்களிடம் எடுத்துச் சென்றோம். 
 

மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்றார்கள். பின்னர் காங்கிரஸ் - பாஜக சரிசமமாக வரும் என்றார்கள், பின்னர் பாஜக ஆட்சிக்கு வரும் என கருத்துக் கணிப்புகள் பல விதமாக வந்தது. நிச்சயமாக பாஜக தனி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைக்கும். 
 


மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மோடியின் பிரச்சாரம் இருந்தது. அதேபோல பாஜக தேசிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். இதேபோல் காங்கிரஸ் கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ராகுல் காந்தியும் அதிக நேரத்தை ஒதுக்கி கர்நாடகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் ராகுல் சென்றார். நடிகர் ராஜ்குமார் நினைவிடத்திற்கும் சென்றார். 

லிங்காயத் சமுதாய மக்களிடம் பிரிவிணையை ஏற்படுத்தி அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்தது. முஸ்லீம் மக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வைத்து, அதன் மூலம் ஒரு சில முஸ்லீம் வேட்பாளர்களை காங்கிரசுக்கு ஆதரவாக வாபஸ் பெற வைத்துள்ளனர். எந்த வகையில் மக்களை பிரித்து வைத்து அரசியல் செய்ய முடியுமோ, அத்தனை முயற்சிகளையும் காங்கிரஸ் இங்கு செய்தது. 
 

 

 

காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக பாஜக மீது குற்றச்சாட்டு வைக்கிறது, மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைக்கிறது. இருப்பினும் 2014க்கு பின்பாக பீகாரை தவிர அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் வாக்குகள் வந்திருக்கின்றன''. 


 

modi


நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் கர்நாடகத்தில் பாஜக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதா?
 

ஒவ்வொரு தேர்தலும் ஒவ்வொரு கட்சிக்கும் அடுத்தக்கட்டத்துக்கான நகர்வு என சொல்லுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதவில்லை. தென் இந்தியாவை பொறுத்தவரையில் முக்கியமான தேர்தல். கர்நாடகத்தை பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள். ஆகையால் இது எங்களுக்கு முக்கியமான தேர்தலாக கருதுகிறோம்.
 

முன்பு இல்லாத அளவுக்கு பிரச்சாரத்திற்காக அதிக செலவு பாஜக செய்திருக்கிறதே. செய்தி சேனல்களை வைத்தால் ஐந்து நிமிடத்திற்கோர் பாஜக விளம்பரம் வருகிறது. மத்திய அரசின் சாதனைகளை அடுக்குகிறது. இணைய இணைப்பில் மொபைல் போனை திறந்தால் பாஜக விளம்பரம் வருகிறது. மோடி, அமித்ஷா, எடியூரப்பா சிரிக்கிறார்கள்...
 

ஒவ்வொரு மாநில தேர்தலையும் இப்படித்தான் சந்திக்கிறோம். உத்திரப்பிரதேசத்திலும் இப்படித்தான் பிரச்சாரம் செய்தோம். ஒவ்வொரு மாநிலத் தேர்தலையும் பாஜக சீரியஸாக எடுத்துக்கொள்கிறது. தன்னுடைய அத்தனை பலத்தையும் பிரயோகிக்கிறது. 

 

rahul-gandhi


 
தனி பெரும்பாண்மையுடன் பாஜக வெற்றி பெறும் என்கிறீர்கள். எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவீர்கள்?
 

135 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கும். எடியூரப்பா முதல் அமைச்சராக பதவியேற்பார். 
 

 

 

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கள நிலவரம் எப்படி இருந்தது?
 

பெங்களூரு நகரத்தில் 8 தொகுதிகளில் தமிழர்கள் வசிக்கின்றனர். எடியூரப்பாவை முதல்வராக அறிவித்ததால் இங்குள்ள தமிழர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 18 ஆண்டுகள் திருவள்ளுவர் சிலையை மூடி வைத்திருந்ததை திறந்தார் என்பதால் அவர் மீது தமிழர்கள் மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறார்கள். 
 

கர்நாடகாவில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டார்கள் என்று மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. எடியூரப்பா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. ரெட்டி சகோதரர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இருப்பினும் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் போட்டியிடுவதாகவும், பெரும்பாலான இடங்களில் அவர்கள் கை காட்டும் நபரே பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே?. 
 

யார் யாரெல்லாம் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்களோ, எடியூரப்பா உள்பட அவர்களெல்லாம் நீதிமன்றத்திற்கு சென்று வழக்குகளை சந்தித்தார்கள். நீதிமன்றத்தாலேயே குற்றமற்றவர்கள் என்று சொன்னதற்கு பின்னால்தான் அவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

ரெட்டி சகோதரர்கள் அவர்கள் மீதான வழக்கை எதிர்கொண்டுள்ளார்கள். அவர்கள் மீது வழக்கு இருக்கிறது என்பதால், கட்சியில் இருக்கக்கூடிய அவர்களுடைய உறவினர்களை தண்டிக்க முடியாது. கட்சிக்காக உழைக்கக்கூடியவர்களை அவர்களுடைய உறவினர் என்ற ஒரே காரணத்திற்காக தள்ளி வைக்க முடியாது. 

 

vanathisinivasan


இந்த பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னெடுத்து வருகிறது. ஆனால் தற்போது உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மாஃபியாக்களுடன் அந்த அமைச்சர்கள் கைகோர்த்துக்கொண்டு ஒரு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை காங்கிரஸ் மறந்துவிட்டது. 
 

பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் பணம் விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறதே?
 

பாஜக பண விநியோம் செய்வதாக சொல்வது முற்றிலும் தவறானது. காங்கிரஸ் கட்சிதான் பண விநியோகம் செய்தது. காங்கிரஸ் சார்பாக இதுவரை இல்லாத அளவிற்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் விமர்சகர்கள் தமிழகத்தின் பாணி என்று பேசுகிறார்கள், பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.