Skip to main content

12 அமாவாசைக்கு அப்புறம் உங்களுக்கெல்லாம்... செந்தில்பாலாஜி எச்சரிக்கை

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

 

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர் - ஈழத்தமிழர்களுக்கு அநீதி இழைத்துள்ள மத்திய பா.ஜ.க. - மாநில அ.தி.மு.க. அரசுகளைக் கண்டித்து கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 

இதில் கலந்து கொண்டு பேசிய செந்தில்பாலாஜி, நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாகத்தான் நடைபெற்று வந்தது. ஆனால் அதிமுக அரசு தங்களுக்கு ஏற்றவாறு தேர்தல் சூழலை மாற்ற வேண்டும் என்பதற்காக ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை அறிவித்திருக்கிறது.

 

Senthil Balaji


 

நீங்கள் எத்தனை வித்தை காட்டினாலும், அந்த வித்தைகளையெல்லாம் ஓரம் தள்ளிவிட்டு மக்களிடத்தில் வாக்குகளைப் பெற்று சிம்மாசனத்தில் அமரக்கூடிய இயக்கம் திமுக. இந்த மாவட்டத்தில் இருக்கிற 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களும், 115 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களும் என அனைத்து இடங்களும் வெற்றி பெறும் இயக்கமாக திமுக இருக்கிறது. 


 

நீங்கள் வேண்டுமானால் அரசு அதிகாரிகளை பயன்படுத்தி சூழ்ச்சி வலைகளை பின்னலாம். அந்த சூழ்ச்சி வலைகளை கிழ்த்தெறிந்து திமுக வெற்றி பெறும். கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 மணிக்கு வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. 6.30 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல்  செய்ய வருகிறார்கள். அந்த வேட்பு மனுவை வாங்கச் சொல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இருந்து உயரதிகாரிகள் நேரில் சென்று அந்த வேட்புமனுவை வாங்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். 


 

இந்த நிலையை கரூர் அரசு அதிகாரிகள் எடுத்தால் நிச்சயம் 12 அமாவாசைக்கு அப்புறம் உங்களுக்கெல்லாம் நல்லது கிடைக்கும். எப்படி காவல்துறைக்கெல்லாம் நல்லது கிடைக்குமோ அப்படி. எல்லா அதிகாரிகளையும் சொல்ல முடியாது. ஒரு சிலர். நடுநிலை இல்லாத அதிகாரிகளுக்கும் தலைவரின் ஆட்சி அமைந்தவுடன் நல்லது கிடைக்கும். நடுநிலை தவறினால் சூழ்நிலை மாறும். ஆட்சி மாறினால், காட்சி மாறும். அதற்கு அப்புறம் எங்கு இருப்பீர்கள் என்று தெரியாது. இதனை எச்சரிக்கையாக சொல்கிறேன். அதிகாரிகளைப் பொறுத்தவரை நடுநிலையோடு செயல்படுங்கள். தேர்தலில் யார் வரவேண்டும் என்பதை நிர்ணயிக்கக்கூடிய இடத்தில் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பேசினார். 


 

சார்ந்த செய்திகள்