Skip to main content

போராட்டக்களமாக மாறும் வடமாவட்டங்கள்!

Published on 06/06/2018 | Edited on 07/06/2018
road

 


முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் வரை எட்டு வழிச்சாலை அமைக்க தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த எட்டு வழிச்சாலைக்கு பசுமை சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் கோடியில் சேலத்தில் இருந்து சென்னை வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து வெறும் 3 மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலத்தை அடையலாம் என்பது இலக்கு. 
 

ஆனால் இந்த சாலை அமைப்பதை பொதுமக்களும் விவசாயிகளும் விரும்பவில்லை. இதனால் சுமார் ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் துண்டாடப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படுகிறது. பல கிராமங்கள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விளை நிலங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான விளைநிலங்கள் சாலையால் பறிபோவதால் அவர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளார்கள். 
 

 

 

இந்த சாலை அமைப்பு பற்றிய அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சாலை அமைத்தால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மிக எளிதாக தங்களது சரக்குகளை சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடியும். ஆனால் இரண்டு ஏக்கர், 3 ஏக்கர் விவசாய நிலமுள்ள விவசாயி இந்த சாலையால் தனது நிலம் துண்டாடப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏறபட்டு வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறியுள்ளது. 
 

 

 

கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபாரத்திற்கும், லாபத்திற்கும் அப்பாவி விவசாயிகளின் வாழ்வியல் நிலைகளை மண்ணாக்குவது இந்த அரசின் நோக்கமாக உள்ளது என்று இந்த பகுதியில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் தயார் படுத்தி வருகிறது. 
 

இந்த எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையக்கப்படுத்தும் பணிகள் தொடங்கும்போது, அதை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க தயாராகி வருகிறார்கள். நிலத்தை அளவீடு செய்ய வரும் அதிகாரிகளை அனுமதிக்க மாட்டோம். என அரம்பத்திலேயே இதனை தடுத்து நிறுத்த அணி திரண்டு வருகிறார்கள்.
 

குறிப்பாக சேலத்திலும், தருமபுரியிலும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த திங்கள் கிழமை அன்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களை சந்தித்து நிலம் கையகப்படுத்தும் பணிகளை செய்யக்கூடாது. எங்கள் விளை நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என மனு கொடுத்துள்ளனர். 
 

விவசாயிகளின் இந்த எதிர்ப்பை கவனித்த மாநில உளவுத்துறை அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், இந்தத்  திட்டத்தால் விவசாயிகளின் போராட்டம் வெடிக்கும். டெல்டா பகுதியில மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும், தென் மாவட்டத்தில் கூடன்குளம் அணுஉலைக்கு எதிராகவும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைக்கு எதிராகவும் நடந்த போராட்டங்களைப் போல் இங்கு போராட்டம் நடக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டள்ளது. 

 

 

 

 

ஆனால் முதல்வர் எடப்பாடி, தனது காலத்தில் தன் சொந்த ஊருக்கு இந்த திட்டத்தை நிறைவேற்றினே வரலாற்று பதிவு இருக்க வேண்டும் என இத்திட்டத்தை செயல்படுத்த பெரும முனைப்பு காட்டி வருகிறார். தமிழ்நாட்டில் தொடர் போராட்டங்களின அடுத்த நகர்வாக சேலம், சென்னை எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் வடமாவட்டத்தில் போர்க்களமாகி வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்