
அருண் விஜய் கடைசியாக பாலாவின் வணங்கான் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து கிரிஷ் திருக்குமரன் இயக்கும் ‘ரெட்ட தல’, தனுஷ் இயக்கும் ‘இட்லி கடை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘ரெட்ட தல’ படம் அருண் விஜய்யின் 36வது படமாக உருவாகிறது. இப்படத்தை மான் கராத்தே, கெத்து உள்ளிட்ட படங்களை இயக்கி கிரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். தன்யா ரவிச்சந்திரன், சித்தி இட்னானி மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க பாபி பாலசந்தர் வழங்குகிறார்.
இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடைக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் பாடல் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் இப்படத்தில் ஒரு மெலோடி பாடல் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் விரைவில் இப்பாடல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.