Published on 08/02/2024 | Edited on 08/02/2024

கணவன் இறந்த செய்தியைக் கேட்ட அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன் மான்சிங் (வயது 65). இவர் காட்டூர் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றில் காவலராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டீபன் மான் சிங் திடீரென உயிரிழந்தார். அவரது மரணச் செய்தியைக் கேட்ட அவரது மனைவி கிறிஸ்டினா மேரி (வயது 63) மாரடைப்பில் காலமானார். கணவன் - மனைவி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.