
சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வியாழக்கிழமை பகல் நேரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை பெய்தது. இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள உள்ள பொன்னங்கோவில் கிராமத்தில் வசிக்கும் சந்தியா(32) என்பவர் வியாழக்கிழமை மதியம் அவரது ஓட்டு வீட்டில் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட இடி மின்னல் சந்தியா சிமெண்ட் சீட் வீட்டின் மீது விழுந்து சந்தியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் பழுதாகின சந்தியா வீட்டு சுவர் உள்ளிட்ட அருகே இருக்கும் 5-க்கும் மேற்பட்ட வீட்டு சுவர்களில் மின்னல் தாக்கி சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட சந்தியாவை சிதம்பரத்தில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.