
தென்னக ரயில்வே தாம்பரத்தில் இருந்து சிதம்பரம் வழியாக கோயம்புத்தூர் அருகே உள்ள போத்தனூர் சந்திப்பு வரை புதிய வாரந்திர ரயிலை இயக்கியுள்ளது.
இந்த ரயில் வெள்ளிக்கிழமை இரவு தாம்பரத்திலிருந்து போத்தனூருக்கு செல்வதற்காக இரவு 9:30 மணி அளவில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்தது. இந்த ரயிலை வரவேற்று ரயில் பயணிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் ராஜா, குமரவேல் மதுசூதனன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்று பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.
இதுகுறித்து நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் வாரந்தரி ரயிலாக இயக்கப்படும் தாம்பரம் - போத்தனூர் விரைவு ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும். அதேபோல் மயிலாடுதுறையில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் ஜன்சதாப்தி விரைவு ரயிலை கடலூர் துறைமுகம் சந்திப்பிலிருந்து இயக்க வேண்டும் என ரயில்வே துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.