Skip to main content

அவசரத்துக்கு ஏடிஎம் வந்தா இப்படியா? - அதிர்ச்சியில் உறைந்த ஸ்விகி ஊழியர்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

 A twenty rupee note instead of 200 rupees came in the ATM

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம் மையத்தில் 200 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 20 ரூபாய் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 'ஒன் இந்தியா' என்ற தனியார் ஏடிஎம் மையத்தில் ஸ்விகியில் வேலை செய்து வரும் ஐயப்பன் என்பவர் 3,500 பணம் எடுத்துள்ளார். ஆனால் 3,140 ரூபாய் மட்டுமே ஏடிஎம் மிஷினில் இருந்து வெளியே வந்துள்ளது. 200 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக இரண்டு 20 ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ந்த ஐயப்பன் புகார் அளித்தார். ஏற்பட்ட குளறுபடி குறித்து நடவடிக்கை எடுப்பதாக அந்த தனியார் ஏடிஎம் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஐயப்பன் ''ஏடிஎம்மில் பைசா எடுக்க முடியல சார். எனக்கு பேங்க் அக்கவுண்ட் கோவில்பட்டி ஃபெடரல் பேங்கில் இருக்கிறது. ஒரு எமர்ஜென்சிக்காக இங்க 3,500 காசு எடுக்க வந்தேன். ஆனால் எனக்கு வெளியில் பைசா வரும் பொழுது 3,140 ரூபாய் மட்டும்தான் வந்தது. அதில் இரண்டு இருபது ரூபாய் நோட்டு, ஒரு நூறு ரூபாய் நோட்டு, ஆறு ஐநூறு ரூபாய் நோட்டு இருந்தது. 20 ரூபாய் நோட்டைப் பார்த்த உடனே அதிர்ச்சி ஆயிட்டேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்