Skip to main content

மாணவர்களை குறிவைத்து புதிய போதைப் பொருட்கள் விற்பனை... மூவர் கைது!

Published on 15/02/2020 | Edited on 15/02/2020

போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதிய வகை போதைப் பொருட்கள்  மாணவர்களுக்கு  விற்பதாக தகவல் கடந்த  இருவாரங்களுக்கு முன் கிடைத்தது.

அப்போது எல்.எஸ்.டி மற்றும் போதை மாத்திரை உட்பட புதிய வகை போதை பொருட்களை விற்பனை செய்த பலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 Three arrested for drug sales

 

கைதானவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்த கும்பலைச் சேர்ந்த கேரளா நபர்கள் கல்லூரி மாணவர்கள் போர்வையில் மயிலேறிபாளையம் பகுதியில் தங்கி இருப்பது தெரிய வந்ததையடுத்து இன்று போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் மயிலேரிபாளையம் பகுதியில் இருந்த கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த  பில்ஜூலால், அர்ஜூன்பிரசாத் , சாரங் ஆகிய மூன்று பேரிடம்  இருந்து போதை மருத்து தடவிய  LSD அட்டை, methamphetamine போதை மருந்து, 1.25 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டது.

இவர்களைப். பற்றி சொல்லும் நுண்ணறிவு போலீசார்...கேரளாவைச் சேர்ந்த இந்த நபர்கள் இங்குள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐடி துறையில் இருக்கும் ஊழியர்களை  குறிவைத்து அவ்வப்போது பெரிய அளவில் பார்ட்டி நடத்தி இந்த புதிய வகை போதை பொருட்களை விநியோகம் செய்திருக்கிறார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட இன்னும் சிலரை நாங்கள் தேடி வருகிறோம். அவர்களும் சிக்கினால் ஒரு பெரிய போதை நெட்வொர்க் பிடிபடலாம் என்கிறார்கள் உறுதியாய்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.