Published on 24/09/2020 | Edited on 24/09/2020

தமிழ் பள்ளிக்கூடத்தை மூடக்கூடாது என குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் தமிழ் வழி பள்ளிக்கூடம் மூடப்பட்டதால் அங்கு படிக்கும் மாணவர்கள் தவித்து வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்ட தமிழ் பள்ளிக்கூடம் மாணவர்கள் வருகை குறைவால் மூடப்பட்டது. குஜராத் மாநில வளர்ச்சிக்கு தமிழர்கள் நிறைய பங்களிப்பை செய்துள்ளனர். அகமதாபாத்தில் தமிழ் பள்ளிக்கூடம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்வழி பள்ளிக்கூடம் செயல்படுவதற்கான செலவை தமிழக அரசே முழுமையாக ஏற்க தயார்' என்று முதல்வர் பழனிசாமி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.