Skip to main content

சர்க்கரை ஆலைத் தொழிலாளி மனைவியுடன் தீக்குளிக்க முயற்சி! 

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
ambika sugars pennadam

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்துள்ளது இறையூர். இங்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு மருதபிள்ளை என்பவர் சர்க்கரை ஆலையைத் தொடங்கினார். அருணா சர்க்கரை ஆலை என்று பெயரிடப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் உதவியாக இந்த ஆலை இருந்து வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆலை முதலாளி மருதபிள்ளை இறந்துவிட்டார். அதன்பிறகு அவரது வாரிசுகள் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜ முதலியார் வாரிசுகளுக்கு அருணா சர்க்கரை ஆலையை விற்பனை செய்துவிட்டார்கள்.

 

அதன் பிறகு அம்பிகா சர்க்கரை ஆலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் கரும்பு அரவை செய்தனர். கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் அனுப்பிய கரும்பிற்கு பல கோடிகள் பணம் பாக்கி வைத்துள்ளது ஆலை நிர்வாகம். அதேபோன்று ஆலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சில ஆண்டுகளாகவே சம்பளம் தரவில்லை. அவர்களும் கரும்பு விவசாயிகளும் ஆலய நிர்வாகத்திடம் தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைக் கேட்டு அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 

இந்தநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆலையை மூடிவிட்டனர். ஆலையில் வேலை செய்த சுமார் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இதற்கிடையே ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடனை வசூலிப்பதற்காக  வங்கிகள் ஒரு தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைத்துள்ளது. அந்த ஏஜென்சியை சேர்ந்த நபர்கள் ஆலைக் குடியிருப்பில் வசித்து வரும் தொழிலாளர்ளை அந்த வீடுகளைக் காலி செய்யச் சொல்லி மிரட்டி வருகிறார்கள்.

 

இதற்காக தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரம் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீட்டைக் காலி செய்யுமாறு மிரட்டி வருகிறார்கள். இதற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள் வங்கி ஏஜென்சி ஆட்கள். இதனால் இங்கு வசித்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். 

 

நேற்று தொழிலாளி சுரேஷ்குமார் அவரது மனைவி குணமங்கை ஆகியோர் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்ட ஏஜென்சி ஆட்களுக்குப் பயந்து இருவரும் ஆலை முன்பு தீக்குளிக்க போவதாக அறிவித்துள்ளனர். இது பற்றிய தகவலறிந்த பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீக்குளிக்கப் போவதாக அறிவித்த தம்பதியினர் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

 

அப்போது தொழிலாளி சுரேஷ் குமார், நான் உட்பட எங்கள் தொழிலாளர்களுக்கு ஆலை நிர்வாகம் இரண்டு ஆண்டுகளுக்கான ஊதியம், தொழிலாளர் வைப்பு தொகை, காப்பீட்டுத் தொகை உள்ளிட்டவற்றை இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. அது எங்களுக்கு வழங்கி விட்டு எங்கள் குடும்பங்களை வெளியேற்றட்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததன் பேரில் அந்த தம்பதியினர் சமாதானம் அடைந்து அங்கிருந்து சென்றனர். இச்சம்பவம் பெண்ணாடம்  இறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் கொடுத்த கரும்பிற்குப் பணம் தராமல் ஏமாற்றி வருகிறது. அவர்கள் வேலை செய்த தொழிலாளர்களுக்குச் சம்பளம் தராமல் அவர்களைக் குடியிருப்பில் இருந்து துரத்த பார்க்கிறது. தொழிலாளர்களையும் விவசாயிகளையும் ஏமாற்றி வரும் இந்த ஆலை நிர்வாகத்தின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்களும், ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளும். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதுவும் பேசக் கூடாது” - குஷ்புவிற்கு அம்பிகா கண்டனம்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
ambika condemn kushboo speech

சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ஆர்ப்பாட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். 

அப்போது, “தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப் போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் மூத்த நடிகை அம்பிகா, “எதுவாக இருந்தாலும் சரி... யாராக இருந்தாலும்.. எந்த கட்சியாக இருந்தாலும் சரி... ஏதாவது ஒரு உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ.. ஏற்றுக்கொண்டு பாராட்ட வேண்டும். அப்படி பாராட்ட முடியாவிட்டால் எதுவும் பேசக் கூடாது. இழிவான வார்த்தைகளையும் பயன்படுத்தகூடாது. எதற்காக பிச்சை என்ற வார்த்தையை சொல்லணும். 5 ரூபாய் கூட அவர்களுக்கு உதவும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

திருமணத்தை மீறிய உறவு; ஆண் நண்பருடன் சேர்ந்து வாலிபரை கொலை செய்த பெண்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

cuddalore pennadam murugankudi village incident 

 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள முருகன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி கவிதா (வயது 28). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் விருத்தாசலம் பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்திருப்பவர் ஆறுமுகம். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து பாலக்கரை பகுதியில் பட்டாணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

 

ஆறுமுகத்தின் கடைக்கு கவிதா பட்டாணி வாங்கச் சென்ற போது இருவருக்கும் இடையில் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாடைவில் திருமணத்தை மீறிய உறவாக  மாறியது. இருவரும் விருத்தாசலம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தி (வயது 55). இவர் ஆறுமுகத்தின் நண்பர். ஆறுமுகத்தை பார்க்க அடிக்கடி விருத்தாசலம் சென்ற வைத்திக்கும் ஆறுமுகத்துடன் வசித்து வந்த கவிதாவிற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆறுமுகத்திற்கு தெரிய வரவே கவிதாவை கண்டித்துள்ளார்.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை கவிதா ஆறுமுகத்திடம் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் வருவதாக கூறிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த ஆறுமுகம் கையில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு கவிதாவுக்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்துள்ளார். கிள்ளனூரில் உள்ள வைத்தி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு வைத்தியம் கவிதாவும் தனிமையில் இருந்துள்ளனர். இதை கண்டு கோபமடைந்த ஆறுமுகம் தன்னுடன் வருமாறு கவிதாவை அழைத்துள்ளார். இதனால் கவிதா, ஆறுமுகம், வைத்தி மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆறுமுகம் தான் எடுத்து வந்திருந்த பெட்ரோலை கவிதா மேல் ஊற்றுவதற்கு முயல கவிதாவும் வைத்தியும் ஆறுமுகம் மீது அந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.

 

இதில் ஆறுமுகம் பலத்த காயமடைந்துள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கவிதா மற்றும் அவரது ஆண் நண்பர் வைத்தி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.