Skip to main content

சினிமா பாணியில் வீட்டை உடைத்து பொருட்களை லாரியில் கடத்தல்!

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் குளத்துப்பட்டியை  சேர்ந்தவர் மணிமாறன். இவர் கேபிள் டிவி நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். அதன் பின் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மணிமாறன் வீட்டிற்குள் சென்ற போது வீட்டிலுள்ள வீட்டு உபயோக பொருட்களான  கட்டில், மெத்தை, சோபா, பிரிட்ஜ், ஃபேன், மிக்ஸி, இன்வெர்ட்டர் என சகலமும் திருடப்பட்டு  வீட்டை துடைத்து வைத்தது போல் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை விட கொடுமை என்னவென்றால் பூஜை அறையில் இருந்த விநாயகர் படத்தை கூட கொள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக மணிமாறன் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

Breaking the house in cinematic style     Trafficking thief dindigul


இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மணிமாறன் வீட்டிலிருந்து திருடப்பட்ட பொருட்களில் ஒன்றான இணையதள மோடம் செயல்பட தொடங்கியுள்ளதை அறிந்து விசாரணை துரிதமாக மேற்கொண்ட போலீசார், நிலக்கோட்டை பொட்டி செட்டிபட்டியை சேர்ந்த பெருமாள், அவனது கூட்டாளியான சிலுக்குவார்பட்டி ரவி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 2.5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை கைப்பற்றினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.


இந்த கொள்ளை சம்பவத்தில், தொடர்புடைய ஆவாரம்பட்டியை சேர்ந்த சுப்புகாளையை போலீசார் தேடி வருகின்றனர். சூரியா படமான நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக கருணாஸ், நீதிபதி வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் திருடி லாரியில் ஏற்றி கொண்டு போவது போல் நடித்திருப்பார். அதேபோல் மணிமாறன் வீட்டில் திருடிய பொருட்களை எல்லாம் லாரியில் ஏற்றி லொடுக்கு பாண்டிகள் கொண்டு சென்று இருக்கிறார்கள். இப்படி  சினிமா பாணியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட லொடுக்கு பாண்டிகளிடமிருந்து  கொள்ளை பொருட்கள் அனைத்தையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கடையில் புகுந்து திருட முயன்ற நபர்; பெண் ஊழியர்களின் செயலால் பதறியடித்து ஓட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Female employees who were beaten with a whip on Mysterious person who tried to steal

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே ‘குடியாத்தம் பலகாரம்’ என்ற பெயரில் தின்பண்ட கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில், முழுவதும் பெண் ஊழியர்களே பணியாற்றி வருகின்றனர். இந்தக் குடியாத்தம் பலகார கடைக்கு அருகிலேயே மற்றொரு கடை ஒன்று உள்ளது. பெண்கள் அங்கும் சென்று பணியாற்றுவார்கள், அங்குள்ள பெண்கள் இங்கும் வந்து பணியாற்றுவார்கள்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (27-04-24) பெண் ஊழியர்கள் அருகில் உள்ள அவர்களது மற்றொரு கடைக்கு சென்று இருந்தனர்.  சில பெண்கள், கடை மாடியில் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்றனர். அப்போது கல்லாவில் யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர் ஒருவர் கடைக்குள் புகுந்து கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தைத் திருட முயன்றார்.

அப்போது, கடைக்குள் வந்த இரண்டு பெண் ஊழியர்கள் திருட வந்த மர்ம நபரை அங்கிருந்த துடப்பத்தால் அடித்து அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்தச் சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கேமாராக்களில் பதிவாகியுள்ளன. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில், கடையில் திருட வந்த அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் திருட வந்த மர்ம நபரை, பெண் ஊழியர்கள் துடப்பத்தால் அடித்து விரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.