Skip to main content

உதவி செய்வது போல் கொலை, கொள்ளை.. சிக்கிய இரு வாலிபர்கள்..!!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

வயதான தம்பதிகளுக்கு மருந்து, மாத்திரை, மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து சரியான தருணம் பார்த்து அவர்களை கொன்று மற்றும் கொள்ளையடித்த இரு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.
 

murderes

 

 

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பிள்ளையார்கோவில் பின்புறம் செட்டியார் தெருவினை சேர்ந்தவர் ஆதப்பன்(82), மீனாட்சி(78) தம்பதியினர். இவர்களது மகன் வேலை நிமித்தமாக தஞ்சாவூரில் வசிக்கும் சூழலில் இவர்களிருவரும் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்துள்ளனர். நேற்று முந்தின இரவில், கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், ஏற்கனவே வீட்டினுள் இருந்த இரு வாலிபர்கள் இவர்களை தாக்கி துன்புறுத்தி, " நகை, பணத்தை கேட்டிருக்கின்றனர். அவர்கள் மறுக்கவே,  மீனாட்சியை அருகிலிருந்த சுவற்றில் வைத்து முட்டித்தள்ள சம்பவ இடத்திலேயே அவர் இறந்துள்ளார். அதே வேளையில் ஆதப்பனை கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை மிதித்து நகை, பணம் இருக்குமிடத்தை கேட்டுள்ளனர். ஒருக்கட்டத்தில் அவரும் இறந்ததாக எண்ணி மீனாட்சி கழுத்திலிருந்த 10 பவுன் மதிப்புள்ள செயின், காதில் இருந்த தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டவர்கள், அங்கிருந்த வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். நேற்று காலைப் பொழுதில் வழக்கமாக பால் ஊற்ற வருபர்களுக்கு வீடு திறந்து கிடந்ததால் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் கூற, அவர்களும், இறந்த நிலையில் கிடந்த மீனாட்சியையும், மயங்கிய நிலையிலிருந்த ஆதப்பனையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சிவகங்கை புதூரை சேர்ந்த கணேசன், மற்றும் வேப்பத்தூர் பச்சேரியை சேர்ந்த செல்லபாண்டி என்பவர்களை கைது அவர்களிடமிருந்து 5 சவரன் நகை, 15 ஆயிரம் ரொக்கத்தினையும் பறிமுதல் செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், " உறவுக்காரர்கள் இல்லாத வயதான ஆட்களை தேர்வு செய்வோம். மருந்து மாத்திரை வாங்குவதற்கே சிரமப்படும் அவர்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து அவர்களுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொள்வோம். பிறகு அவர்களது வீட்டிலிருக்கும் பொருட்களை எடுத்து விற்க ஆரம்பிப்போம். அன்றைய சூழலில் திருமணத்திற்கு செல்வதற்காக வங்கியிலிருந்து பணம் மற்றும் நகைகளை எடுத்து வைத்திருந்தார் ஆதப்பன். அதனை அபகரிக்க முன்கூட்டியே அவரது வீட்டினில் உள்ளே சென்று காத்திருந்து இந்த செயலை செய்தோம்." என்றிருக்கின்றனர் கைது செய்யப்பட்ட இருவரும். இவர்கள் தான் அன்று வந்தார்கள் என சிகிச்சைப்பெற்று வரும் மருத்துவமனையிலேயே அடையாளம் காட்டியிருக்கின்றார் ஆதப்பன். தொடர்ந்து நடைப்பெற்று வரும் விசாரணையில் இதுபோல் வேறு எங்கேயாவது சம்பவம் செய்துள்ளார்களா..? என விசாரித்து வருகின்றனர் மதகுப்பட்டி காவல்துறையினர். உதவி எனும் பெயரில் கொலை கொள்ளை சம்பவம் நடைப்பெற்றதால் இங்கு பரப்பரப்பு நிலவி வருகின்றது.

 


 

சார்ந்த செய்திகள்