ff

Advertisment

இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாளான பக்ரீத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலுள்ள நவாப் பள்ளி வாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் நகரிலுள்ள பத்துக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை செய்தனர்.

ff

தொழுகை முடிந்ததும் நவாப் பள்ளி வாசல் முத்தவல்லிகள் கேரள மழை வெள்ள பாதிப்புக்காக 50 ஆயிரம் மதிப்பில் நிவாரண நிதி வழங்குவதாக அறிவித்தனர். அதை கேட்டவுடன் மற்ற பள்ளிவாசல் முத்தவல்லிகளும் அவரவர் பள்ளிவாசல்கள் சார்பாக ரூபாய் 5000, 10000, 20000, 25000, 30000, 50000 என நிவாரண நிதி தருவதாக அறிவித்தனர். மேலும் சில தனி நபர்களும், வணிக நிறுவனத்தாரும், இஸ்லாமிய அமைப்பினரும் தனித்தனியாக தருவதாக அறிவித்தனர். ஒரு மணி நேரத்தில் இவ்வாறு சுமார் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு நிவாரண நிதி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர். ஒரு சிலர் கையோடு தாங்கள் வைத்திருந்த நிதியையும் முத்தவல்லிகளிடம் அளித்தனர்.

Advertisment

ஈகைத்திருநாளின் நோக்கம் இயலாதவர்க்கு இயன்றதை செய்வதே. அப்படிப்பட்ட நாளில் மழை வெள்ளத்தால் பரிதவிக்கும் கேரள மக்களுக்கு மளமளவென்று மனமுவந்து பலரும் நிதி அளிக்க முன்வந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக இருந்தது.