style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 30 இடங்களில் அரசு பேருந்து முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில்,
பொங்கலை ஒட்டி வரும் 11 ஆம் தேதிமுதல் 14 தேதி வரை சென்னையிலிருந்து 14,263 பேருந்துகள் இயக்கப்படும்.மேலும்கோயம்பேட்டில் 26 மற்றும் சானிடோரியத்தில் 2, பூந்தமல்லி, மாதவரத்தில் தலா ஒன்று என 30 முன்பதிவு மையங்களும் இன்று செயல்படதொடங்கும், தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்காக 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என கூறினார்.