Skip to main content

பெரம்பலூர் டவுனில் ரவுடி வெட்டி கொலை! மீண்டும் ரவுடிகளின் ரத்த வாடை! 

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

பெரம்பலூர் டவுன் திருநகரை சேர்ந்தவர் பன்னீர். இவர் மீது கொலை, கட்டப் பஞ்சாயத்து மிரட்டல் என பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் போலீசின் ரவுடி லிஸ்ட்டிலும் உள்ளார். இவர் புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் பெரம்பலூர் அங்காளம்மன் கோவில் அருகே வரும்போது சில மர்ம நபர்கள் மறைந்திருந்து அறிவாளால் கழுத்தில் சாமாறியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
 

Perambalur


தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்திற்க்கு உடனே வந்தனர். பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் யார்? முன்விரோதமா? தொழில் போட்டி காரணமா? என்ற கோணத்தில் போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை இரவே அதே ஊரை சேர்ந்த நான்கு பேர் போலீசாரிடம் சரணடைந்துள்ளனர். அவர்களிடமும் தீவிர விசாரணையில் உள்ளனர் பெரம்பலூர் போலீசார். 
 

வளர்ந்து வரும் நகரம் பெரம்பலூர். இங்கே அவ்வப்போது இது போன்ற கொலை சம்பவங்கள் நடந்து வந்துள்ளன. சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த நகரம் மீண்டும் ரவுடிகளின் ரத்த வாடை வீச ஆரம்பித்துள்ளன. பள்ளிகள், கல்லூரிகள் தொழில்கள் வளர்ந்துள்ள இந்த ஊரில் பலர் குடியேறி வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு அச்சத்தை ஏற்ப்பத்தியுள்ளது இச்சம்பவம். காவல்துறை மீண்டும் ரவுடிகளின் கொலைவெறியை தடுத்து அமைதியான நகரமாக மாற்றுமா? மீண்டும் ரவுடிகள் ராஜ்யமாக மாறுமா? என்கிறார்கள் நகரவாசிகள்.
 

-எஸ்.பி.சேகர்
 

சார்ந்த செய்திகள்

Next Story

“உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கைவிட்டு விடக்கூடாது”-வற்புறுத்திய காதலியை அடித்துக்கொலை செய்த காதலன்! 

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

The boyfriend who beat his girlfriend

 

பெரம்பலூர் மாவட்டம், அ.மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா(43). சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்து போய்விட்டார். இவரது மகன், மகள் ஆகிய இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். புஷ்பா தனது தாய் பெருமாயி என்பவருடன் மேட்டூரில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் புஷ்பா கடந்த 7ஆம் தேதி அரும்பாவூர் வரை சென்று வருவதாகத் தனது தாய் பெருமாயிடம் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மகள் வீட்டுக்கு வரவில்லையே என்று  தவித்துப் போன தாய் பெருமாயி தனது மகள் புஷ்பாவை பல்வேறு இடங்களுக்கும் சென்று தேடிப் பார்த்துவிட்டு அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் புஷ்பாவை பல்வேறு இடங்களில் தேடிக் கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அறிந்த போலீசார் அன்னமங்கலம் காட்டுப்பகுதிக்குச்சென்று அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தனது மகள் புஷ்பாவை காணவில்லை என்று தங்களிடம் புகார் அளித்த பெருமாயியை அழைத்துச் சென்று அந்த உடலைக் காட்டியுள்ளனர். அது காணாமல் போன தனது மகள் புஷ்பா தான் என்று அடையாளம் காட்டியுள்ளார் பெருமாயி. இதையடுத்து புஷ்பாவின் கொலை குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையின் மூலம் புஷ்பாவின் ஊரான மேட்டூரை சேர்ந்த 45 வயது சோலைமுத்து என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவருக்கும் கணவர் இல்லாமல் இருந்து வந்த புஷ்பாவுக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

 

இந்த நிலையில் சம்பவத்தன்று அன்னமங்கலம் வனப்பகுதியில் சோலைமுத்து மற்றும் புஷ்பாவும் சந்தித்துள்ளனர். அப்போது புஷ்பா, சோலைமுத்துவிடம் உன்னையே நம்பியிருக்கும் என்னை நீ கை விட்டு விடக்கூடாது, எனவே நீ என்னை உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். திருமணத்திற்கு மறுத்துள்ளார் சோலைமுத்து. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி உள்ளது. கடும் கோபத்தில் சோலைமுத்து புஷ்பாவை கல்லால் அடித்துக்கொலைசெய்து அந்த இடத்திலேயே போட்டுவிட்டு புஷ்பா வைத்திருந்த 25ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்து உள்ளார் சோலைமுத்து. அவரை போலீசார் தேடிப் பிடித்து கைது செய்துள்ளனர். காதலியைக் கொலை செய்து போட்டு விட்டுச் சென்ற காதலன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

Next Story

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த தம்பதி... பதறிய மகன் மற்றும் உறவினர்கள்!! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

The couple lying in a decapitated position; shocked son and relatives

 

பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது அல்லி நகரம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 62 வயது பெரியசாமி மற்றும் அவரது 48 வயது மனைவி. இவர்களது மகன் மருத்துவம் படித்துவிட்டு, பணியின் காரணமாக சென்னையில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். பெரியசாமியும், அவரது மனைவி ஆகிய இருவர் மட்டும் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு அல்லி நகரத்திலேயே வசித்துவந்துள்ளனர். இவர்களது மகன் முருகானந்தம் சென்னையில் இருந்தாலும், தினசரி காலை மாலை தனது பெற்றோருடன் செல்ஃபோன் மூலம் பேசி விசாரித்துவருவது வழக்கம்.

 

அதன்படி நேற்று (08.06.2021) காலை சென்னையிலிருந்து முருகானந்தம் தாய், தந்தையுடன் பேசுவதற்காக செல்ஃபோனில் தொடர்புகொண்டுள்ளார். ஃபோனை எடுத்து யாரும் பேசவில்லை. மீண்டும் ஒருமுறை தொடர்புகொண்டும் அவர்கள் ஃபோனை எடுத்துப் பேசவில்லை. நீண்டநேரம் முயற்சி செய்தும் தாய், தந்தை இருவரும் பேசாததால் அதிர்ச்சியடைந்த முருகானந்தம், அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு ஃபோன் செய்துள்ளார். தனது தாய், தந்தை இருவருமே பலமுறை ஃபோன் செய்தும் செல்ஃபோனை எடுத்துப் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. எனவே உடனடியாக எங்கள் வீட்டிற்குச் சென்று பார்த்து தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவரது உறவினர் அவரது தாய், தந்தை வசித்த வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த வீட்டில் பெரியசாமியும் அவரது மனைவியும் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். பதறிப்போன அவர்களது உறவினர் அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுக்குத் தகவல் சொல்லியதோடு, உடனடியாக இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த கணவன், மனைவி இருவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கணவன், மனைவி இருவரையும் கழுத்தறுத்து கொலை செய்ததற்கான காரணம் என்ன என்று வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, நகை மற்றும் பணத்திற்காக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு கணவன், மனைவி இருவரும் இரவு நேரத்தில் வீட்டில் கொலை செய்யப்பட்டது குறித்து வேறு ஏதேனும் காரணம் உண்டா, கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பதைக் கண்டறிவதற்காக கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அப்படி இருந்தும் குற்றவாளிகள் யார் என்று இதுவரை தெரியவில்லை. மாவட்டக் காவல்துறை அதிகாரி, தனிப்படை அமைத்து கொலையாளிகளைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தனிப்படை போலீசார் கொலையாளிகளைத் தீவிரமாக தேடிவருகிறார்கள்.