Skip to main content

தமிழக மக்களே ! தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு கடிதம் எழுதுங்கள் !

Published on 09/03/2019 | Edited on 09/03/2019

தமிழகத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்புற பகுதிகள் உள்ளனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளதா என்றால் கேள்வி குறி தான் .ஏனென்றால் சாலை வசதிகள் மற்றும் மின்சார வசதிகள் , பேருந்து வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் எவ்வாறு இந்த பிரச்சினையை தமிழக அரசின் கவனித்திற்கு கொண்டு செல்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். மக்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் எளிதில் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். தமிழக முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டியதில்லை . இதற்கு செலவு செய்ய வேண்டியதும் இல்லை. இதற்கு "INTERNET" இருந்தால் மட்டும் போதும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு இணைய தளம் மூலம் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் நேரடியாகவும் , எளிதாகவும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம். இதற்கான தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு (Tamil nadu Chief Minister's Special Cell ) இணைய தள முகவரி : http://cmcell.tn.gov.in/ ஆகும். 

cm cell petition

இதை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களும் முன்னெடுக்க வேண்டும். தங்கள் பகுதியில் நீண்டகாலமாக சாலை இல்லையா ? பேருந்து வசதிகள் இல்லையா ? ஆரம்ப சுகாதார மருத்துவமனை இல்லையா ? குடிநீர் வசதி இல்லையா ? அரசு நூலகம் இல்லையா ?  என்பதை சமந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் ஆராய்ந்து மக்களோடு இணைந்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு இணைய தளம் மூலம்  கடிதம் எழுதுங்கள். இணையதளம் மூலம் கடிதம் எழுதுவதற்கான வழிமுறைகளை கூறுகிறேன். தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு இணைய தள முகவரி : http://cmcell.tn.gov.in/ சென்று தனக்கான (Permanent Register) நிரந்தர கணக்கைத் தொடங்க வேண்டும் . இதற்காக கணக்கை (Register) தொடங்க உள்ளவரின் பெயர் , தந்தை பெயர் , நிரந்தர முகவரி , தொலைப்பேசி , ஈ-மெயில் முகவரி , ரகசிய குறியீடு (Password) போன்றவை கட்டாயம் குறிப்பிட வேண்டும். பிறகு தனக்கான USER NAME , PASSWORD யை மட்டும் நிரந்தர கணக்கை தொடங்க உள்ளோர் நினைவில் கொள்ள வேண்டும் (அல்லது) தனது ஈமெயில் முகவரியில் சேமித்து கொள்ளலாம் (அல்லது) தங்களது கணினியில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் அல்லது குறைகள் ஏதேனும் இருந்தால் அவை தொடர்பான புகைப்படங்கள் மற்றும் விபரங்களை தமிழில் டைப் செய்து இந்த இணைய தளத்திற்கு சென்று பின் பதிவிட வேண்டும். புகார் தொடர்பான சமந்தப்பட்ட துறை தேர்ந்தெடுத்து முழு விபரங்களை குறிப்பிட்டு "SUBMIT" செய்ய வேண்டும். 

பின்பு பதிவு செய்யப்பட்ட தொலைப்பேசி எண் மற்றும் ஈமெயிலுக்கு "Acknowledgement No"  குறுந்தகவல் வரும். இதனை மனுக்கொடுக்கும் மனுதாரர் சேமித்து வைக்க வேண்டும். இதன் மூலம் மனுவின் நிலையை அறியலாம். மேலும் தமிழக முதல்வரின் சிறப்பு தனிப்பிரிவு மனுதாரரின் மனுவை சமந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் சமந்தப்பட்ட அலுவலகங்களுக்கு  மனுவை அனுப்பி உரிய நடவடிக்கை தொடர்பான பதிலை மனுதாரருக்கும் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவிக்கும் அனுப்புமாறு கோரும். இதன் பிறகு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான தகவல் மனுதாரருக்கு கடிதம் அனுப்படும். இதன் மூலம் மனுதாரர் தான் அனுப்பிய மனுவின் நிலை மற்றும் அரசின் நடவடிக்கையை எளிதாக அறியலாம். இளைஞர்கள் மட்டும் இந்த இணையதளத்தை பயன்படுத்தினால் தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யும் வாய்ப்பாக கட்டாயம் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

petition to cm cell

பி. சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்