Skip to main content

கருத்துக் கணிப்பில் திமுக, பாஜக முன்னிலை ! 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

இந்தியா முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் "டைம்ஸ் நவ்"  பத்திரிக்கை 14301 பேர்களை கொண்டு , நாடு முழுவதும் 960 இடங்களில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் தமிழகம் , கர்நாடகா உள்பட அனைத்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது "டைம்ஸ் நவ்". இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 33 மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் எனவும் , அதிமுக கூட்டணி 6 மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
 

opinion poll



புதுவையில் காங்கிரஸ் கூட்டணி மக்களவை தொகுதியை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அடுத்து எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி (NDA) - 279 மக்களவை தொகுதிகளை கைப்பற்றி மீண்டும்  ஆட்சி அமைக்கும் என "டைம்ஸ் நவ்" பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணிக்கு (UPA) -149 மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.மற்ற கட்சிகள் - 115 மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் எனவும் , தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என முன்னணி பத்திரிக்கைகள் தங்கள் கருத்துக்கணிப்பில்  கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்