Skip to main content

சூதாட்ட விவகாரம்...நாராயணசாமி - கிரண்பேடி மீண்டும் மோதல்...!

Published on 28/12/2019 | Edited on 28/12/2019

கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப்புகளை தொடங்க புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, "சூதாட்ட கிளப்புகளை திறப்பது, மதுபான கடைகளை திறப்பது, லாட்டரி விற்பனையை தொடங்குவது  இவைகள் தான் புதுச்சேரியின் வளர்ச்சியா? இதுதான் மக்கள் நலனா? இதுவே ஏழைகளுக்கானது என அழைக்க வேண்டுமா?  இதுகுறித்து முதல்வர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். புதுச்சேரி மக்கள்  இது போன்ற வணிகம் எதையும் விரும்பவில்லை" என சமூகவலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

 

  gambling-and-Lottery-allowed-issue-cm narayanasamy-kiran-bedi-Clash

 



இதற்கு  நேற்று செய்தியாளர்களிடையே பதில் அளித்த முதல்வர் நாராயணசாமி, புதுவை மாநிலத்துக்கு சுற்றுலா வருபவர்கள் என்ன விரும்புகிறார்களோ? அதை செய்துகொடுப்போம். இங்கு கேசினோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதே கவர்னர் கிரண்பெடி பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவிப்பாரா? பல்வேறு மாநிலங்களில் இது போன்ற செயல்பாடுகள் உள்ளன. ஒரு திட்டம் வந்தால் அதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம். கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க என்ன செய்தார்? இதுபோன்ற கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கிரண்பேடி, சமூகவலைதளத்தில் "புதுச்சேரி மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் சூதாடுவது கஷ்டப்பட்ட பணத்தை தொலைப்பதை புதுச்சேரி மக்கள் யாரும் விரும்பவில்லை. அவர்களது குழந்தைகளும் தவறான வழியில் போகக் கூடாது என்று புதுச்சேரி மக்கள் நினைக்கின்றனர். எண்ணி பாருங்கள், நிர்வாகத்தில் உள்ள நாங்கள் முதல்வர் மற்றும் கேபினட்டில் உள்ள சில அமைச்சர்கள் சொல்வதை கேட்டு கேசினோ சூதாட்டம், லாட்டரி கம்பெனி, பீர் உற்பத்திக்கு திறந்த மார்க்கெட்டில் பயணித்தால் மாணவர்கள் எல்லோரும் சூதாட்டம், பீர் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவர். 

இதனால் புதுச்சேரியின் ஆன்மிகம், சமூக பொருளாதாரம் பாதிப்படையும். அத்துடன் மாநிலம் முழுவதும் உள்ள புதுச்சேரியின் சுத்தமான சுற்றுலா என்ற சூழல் மாசுப்படுத்தப்பட்டு இருக்கும். இதுமட்டுமின்றி வரும் சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். ஒரு சில ஆண்டுகளில் நம்முடைய ஆன்மிகம், சமூக பொருளாதாரம் சுத்தமாக மாறி போய் இருக்கும். இதனால் ஒரு சிலர் தான் பயனடைந்து இருப்பர். சூதாட்டம் என்ற ஓநாய் சமூக மாசுபாட்டை புதுச்சேரி மக்கள் எப்போதும் தள்ளியே வைத்துள்ளனர். எந்த ஒரு காலத்திலும் இது போன்ற ஓநாய்கள் தவறி கூட வளர்ச்சி என்ற பெயரில் உள்ளே வரக்கூடாது. சமூக, ஆன்மிக, ஆரோக்கியத்திற்காக எப்போதும் விழிப்போடு இருப்பது தான் சாலச்சிறந்தது" என பதிவிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி அரசின் சுற்றுலா மேம்பாடு; 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்'  மியூசியம் திறப்பு

Published on 17/01/2024 | Edited on 17/01/2024
Opening ceremony Of Artist AP Shreethar's Wonders of White Town 

ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்-இல் பிரம்மாண்ட கலாச்சார நிறுவனம் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்' என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.

வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி - 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் 'ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்', இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.

லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மைகள் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.