மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி , உதவி பேராசிரியர் கருப்பசாமி, முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய நிர்மலாதேவியின் மனுவை தள்ளுபடி செய்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம். மேலும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முருகன், கருப்பசாமி மனுவையும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
அரசு தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுதாரர்கள் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் வாதிட்டும், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்ற வழக்கில் விடுவிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் நிர்மலாதேவி தொடர்பான மூல வழக்கை டிசம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இதன்பின்னர் போலீசார் அழைத்துச்சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உதவி பேராசிரியர் முருகன் அளித்த பேட்டியில், வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது வருத்தமளிக்கிறது. இது சம்பந்தமாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்ய போவதாகவும் கூறினார்.