Skip to main content

நெல்லையில் முன்னாள் பெண் மேயர் வீட்டில் சிபிசிஐடி ஆய்வு!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோரின் கொடூரக்கொலையில் திமுக பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருப்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து கார்த்திகேயனை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.  

CBCID study at ex-mayor's home in Nellai


நேற்று மாலையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று காலை சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக விஜயகுமாரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை போலீசார் இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் மற்றும் டிஎஸ்பி அனில்குமார் ஆகியோர் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று தற்போது ஆய்வு மற்றும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.   

அரசியலில் சீனியம்மாளை மகேஸ்வரி வளரவிடாமல் தடுத்தார் அதன் காரணமாகவே நான் தனியாகவே அவர்கள் வீட்டிற்கு சென்று மூவரையும் கொலை செய்தேன். இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்று போலீசார் விசாரணையில் கார்த்திகேயன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

கொடநாடு வழக்கு. மேலும் 4 பேருக்கு சம்மன்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
 The Kodanadu case. Summons for 4 others

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையில், ஓட்டுநர் கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து  விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக குற்றம் நடைபெற்ற கொடநாடு எஸ்டேட்டில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் தலைமையில் நிபுணர் குழு ஒன்று ஆய்வு செய்வதற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. நிபுணர் குழு அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து முடிவெடுப்பதற்கு அரசு தரப்பு கால அவகாசம் கோரியது. இதனைத் தொடர்ந்து வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் கொடநாடு எஸ்டேட்டில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணியாற்றி வரும் ரமேஷ், ஜெயலலிதா கொடநாடு வரும் போதெல்லாம் அவருக்கு காய்கறிகள் வாங்கிக் கொடுக்கும் தேவன், கோவையைச் சேர்ந்த ரவிக்குமார் மற்றும் அப்துல் காதர் ஆகிய நான்கு பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ள நான்கு பேரும் நாளை கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.