Published on 08/08/2018 | Edited on 27/08/2018

திருத்துறைப்பூண்டியில் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு அனைத்து கட்சியினர் மற்றும் பொது நல அமைப்பினர் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மௌன பேரணி நடத்தினர்.
திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பில் அம்பேத்கர் சிலையில் தொடங்கி தபால் நிலையம், நகராட்சி ரயில்வே சாலை , புதிய பேருந்து நிலையம் என முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை ஆயித்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பேடஜ் அணிந்து மௌம் ஊர்வலம் சென்றனர்.
தொடர்ந்து திமுக தலைவர் கலைஞரின் திருவுரு படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.