Skip to main content

போக்ஸோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

சிதம்பரத்தில் இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

 

Arrested under the Pokso Act

 

சிதம்பரம் அருகே உள்ள மேல்புவனகிரியைச் சேர்ந்த செல்வம் மகன் சூரியமூர்த்தி (25). முடிதிருத்துநர் வேலை செய்யும் இவர் சிதம்பரத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும் 17 வயது மாணவியை காதலிப்பதாக பழகியுள்ளார். பின்னர் கடந்த 23-ம் தேதி அப்பெண்ணை அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண்ணின் தாயார் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் நகர போலீஸார் இருவரையும் மீட்டு, இளம்பெண்ணை பரிசோதனைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து வாலிபர் சூரியமூர்த்தி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த இளைஞர்; காத்திருந்து அவமானப்படுத்திய கிராம மக்கள்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 The family was dragged in a procession wearing sandal garlands and Youth arrested in POCSO case

கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டம், தொட்டவாடா கிராமத்தில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு, 18 வயதுக்குட்பட்ட ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த அணில் மூக்னாவர் என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பைலேஒங்கலா புறநகர் போலீசார், வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர். அதன் பின்னர், அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஹிண்டல்கா சிறையில் அடைத்த்னார். 4 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை சில தினங்களுக்கு முன்பு, வாலிபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 

இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்து தனது கிராமத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது, வாலிபர் கிராமத்திற்குள் வந்ததை அறிந்த சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக இழுத்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிறுமியின் குடும்பத்தினர் வாலிபரின் கையை துணியால் கட்டி செருப்பால் அடித்தும், அவருக்கு செருப்பு மாலை அணிவித்தும் கிராமத்திற்குள் ஊர்வலமாக இழுத்து வருகின்றனர். அவர்களோடு, அந்த கிராம மக்களும் உடன் வருகின்றனர். இதனை அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவர், தங்கள் செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. 

Next Story

ரெய்டில் சிக்கிய பிக் பாஸ் டைட்டில் வின்னர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
big boss 17 title winner Munawar Faruqui arrested

சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

big boss 17 title winner Munawar Faruqui arrested

இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது. 

இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.