Skip to main content

பிப்.14 தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

Published on 31/01/2021 | Edited on 31/01/2021

 

Feb 14: Prime Minister Modi arrives in Tamil Nadu

 

தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி பேச்சுவார்த்தை ஆகிய பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. தமிழகம் வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்டார். 

 

இந்நிலையில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். அண்மையில் டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்