Skip to main content

ஏப்ரல் 2- ஆம் தேதி மோடி, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். ஒரே மேடையில் பங்கேற்பு!

Published on 24/03/2021 | Edited on 24/03/2021

 

bjp election campaign pm narendra modi in madurai

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. பதிவாகும் வாக்குகள் மே 2- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

 

இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேசியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளதால், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். 

 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2- ஆம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் மதுரையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஒரே மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பழங்குடியின பெண்களை ஊடுருவல்காரர்கள் குறிவைக்கின்றனர்” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
PM Modi alleges Infiltrators are targeting tribal women

இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதல் ஆறு கட்டங்களாக 486 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, இறுதிக் கட்டமாக ஜூன் 1ஆம் தேதி உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், இமாச்சலப்பிரதேசம் என உள்ளிட்ட சில இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன் பின்னர், ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், தும்கா பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகையில், “ஜார்க்கண்ட் மீது ஒரு பெரிய நெருக்கடி உருவாகியுள்ளது, அது ஊடுருவல். சந்தால் பர்கானாஸ் ஊடுருவல் சவாலை எதிர்கொள்கிறது. பல பகுதிகளில், பழங்குடியினரின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதால், ஊடுருவல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊடுருவல்காரர்கள் பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கின்றனர். பழங்குடியின பெண்கள், ஊடுருவல்காரர்களின் இலக்காக உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. அவர்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. 

பழங்குடியின பெண்கள், 50 துண்டுகளாக வெட்டப்படுகிறார்கள். உயிரோடு எரிக்கப்படுகிறார்கள். ஒருவரின் நாக்கு பிடுங்கப்பட்டது. பழங்குடியின பெண்களைக் குறிவைக்கும் இவர்கள் யார்? ஜே.எம்.எம் அரசாங்கம் ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்கிறது? ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருந்த போதிலும், ஜார்க்கண்டின் ஒரு மாவட்டத்தில், அது வெள்ளிக்கிழமையாக மாற்றப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இந்துக்களுடன் தொடர்புடையது அல்ல, கிறிஸ்தவ சமூகத்துடன் தொடர்புடையது. ஞாயிற்றுக்கிழமை 200-300 ஆண்டுகளாக விடுமுறையாக இருந்தது. இப்போது, அவர்கள் கிறிஸ்தவர்களோடும் சண்டை போடுகிறார்கள். 

2014க்கு முன்பு காங்கிரஸ் 24×7 கொள்ளையில் ஈடுபட்டதால் மோசடிகள் வாடிக்கையாக இருந்தன. ஆனால், நான் அதிகாரத்திற்கு வந்த பிறகு, அதை நிறுத்தினேன். ஜார்க்கண்டில், ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸும் பரவலான கொள்ளையை நடத்தி வருகிறார்கள். ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். 

Next Story

5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் நிறைவு!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
The election campaign for the 5th phase of voting is over!

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, மே 20ஆம் தேதி நடைபெறும் 5ஆம் கட்டத் தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன. 

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவானது, பீகார்(5), ஜார்க்கண்ட்(3), ஒடிசா(5), மேற்கு வங்காளம்(7), ஜம்மு - காஷ்மீர்(1), மகாராஷ்டிரா(13), உத்தரப் பிரதேசம் (14), லடாக் என மொத்தம் 49 தொகுதிகளுக்கு மே 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (18-05-24) மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. 

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கும், மத்திய ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் போட்டியிடும் லக்னோ தொகுதிக்கும் நாளை மறுநாள் (20-05-24) தேர்தல் நடைபெறவுள்ளது. அதே போல், அன்று நடைபெறும் தேர்தலில், மும்பை வடக்கு தொகுதியில் பியூஷ் கோயல், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி, உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஐந்தாம் கட்டமாக நடைபெறும் இந்தத் தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.