Skip to main content

மாணவிகள் அளித்த புகாரில் தருமபுரி கணித ஆசிரியருக்கு 21 ஆண்டுகள் சிறை!

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
jail

 

நான்கு மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கைதான ஆசிரியருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

தருமபுரி அ.பள்ளிப்பட்டியில் பாலியல் தொந்தரவு வழக்கில் கணித ஆசிரியர் செந்தில்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளுக்கும் ஒரு மாதத்தில் தலா ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.  மேலும்,  நான்கு மாணவிகளுக்கும் சமூகநலத்துறை சார்பில் உதவித்தொகை வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது நீதிமன்றம்.

 

பாலியல் தொந்தரவு அளித்ததாக 4 மாணவிகள் அளித்த புகாரில் கடந்த 2016ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார் செந்தில்குமார்.   வழக்கின் விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்