
தமிழகத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் உட்பட ஐந்து ஏரிகளில் 75.07 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது. ஐந்து முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டிஎம்சியில் தற்போது 8.826 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் 85.92 சதவீதம், புழல் 83.36 சதவீதம், பூண்டி 57.78 சதவிகிதம், சோழவரம் 59.39 சதவிகிதம், கண்ணன்கோட்டை 86.8 சதவீதம் என நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 606 கன அடியிலிருந்து 258 கன அடியாகச் சரிந்துள்ளது.