Skip to main content

காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு தாமதமாக வரும் மருத்துவர்களால் அவதி அடையும் நோயாளிகள்

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
g

 

 

கடலூர் மாவட்டம்  காட்டுமன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு தாமதமாக பணிக்கு வரும் மருத்துவர்களை கண்டித்து நோயாளிகள் மருத்துவரின் இருக்கைக்கு அருகில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

காட்டுமன்னார்குடி அரசு  மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் எனவும்,  நாய் கடிக்கு ஊசி இல்லாததை கண்டித்தும், மருத்துவர்கள் இரவு நேரங்களில் தங்கி பணியாற்ற வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை   வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் காட்டுமன்னார்குடி வட்ட மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்  நடைபெற்றுள்ளது. 

 

gh

 

இந்நிலையில்  பிப் 8-ந்தேதி காலை 9.30 மணிவரை மருத்துவர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் அவதியடைந்தனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட கட்சியினர், நோயாளிகளுடன்  மருத்துவரின் இருக்கைக்கு அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதுகுறித்து நோயளிகள் கூறுகையில் இங்கு பணியாற்றும் சில மருத்துவர்கள் தனியாக மருத்துவமனை வைத்துள்ளார்கள். அதனால் பணிக்கு சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது இல்லை. இரவு நேரத்தில் மருத்துவமனையில் தங்கி பணிசெய்துவம் இல்லை. இது தாலுக்காவின் தலைமை மருத்துவமனை இங்கு நாய்கடிக்கு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனால் எள்ளேரி என்ற கிராமத்தில் உள்ள ஆரம்பசுகாதரநிலையத்தில் நாய்கடிக்கு மருந்து எப்போதும் உள்ளது. அடிக்கடி மருந்து மாத்திரைகள் குறைவாக கொடுக்கீறார்கள் என்று கூறினார்கள்.

 

இதுகுறித்து மாவட்ட மருத்துவ இணைஇயக்குநர் கலா கூறுகையில்,  இனிமேல் அதுபோன்ற நிகழ்வு நடக்காது. மருத்துவர்களை நேரத்திற்கு பணிக்கு வர உத்திரவிட்டுள்ளேன். மருந்து மாத்திரைகள் இரு நாளைக்கு வரமாதிரி கொடுக்கப்படுகிறது என்றார்.  

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய விவகாரம்; பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
Counterfeit case The number of victims is increasing

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது. 

Counterfeit case The number of victims is increasing

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்து உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நீதிபதி கோகுல்தாஸ் சம்பவம் நிகழ்ந்த கருணாபுரம் பகுதிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நீதிபதி கோகுல்தாஸ் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம் மற்றும் கல்யான சுந்தரம் ஆகியோர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் கள்ளச்சாராயம் அருந்திய 4 பெண்கள் உட்பட 54 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிகிச்சையில் இருக்கும் 10 பேர் முழுமையாக கண்பார்வையை இழந்திருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஒரே நேரத்தில் 50 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் விசாரணை

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Bomb threat to 50 hospitals simultaneously; Police investigation

மும்பையில் 50 மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை விசாரணையில் அவை அனைத்தும் புரளி என தெரிய வந்தது. இந்தநிலையில் தற்போது மும்பையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல் படி மருத்துவமனையின் படுக்கைகள், குளியலறைகளில் வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு விரட்டில் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.