Skip to main content

ரேஷன் கடைகளில் குவிந்த மக்கள்: பொங்கல் தொகுப்பு விநியோகம் துவக்கம்!(படங்கள்)

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேபோல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கத்தில் டோக்கன் முறையில் வழங்க திட்டமிட்டு அனைவருக்கும் டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

 

இந்நிலையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை மக்களுக்கு வழங்கத் துவங்கியுள்ளனர். அந்த வகையில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு பொருட்களை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்