Skip to main content

ஏ.டி.எம்-யை உடைத்துக் கொள்ளை முயற்சி... இருவர் சிக்கினர்!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

நெல்லையின் பாளையங்கோட்டையிலிருந்து சாந்தி நகர் செல்லும் மணிக் கூண்டுச் சாலை அருகில் வங்கி ஏ.டி.எம். உள்ளது. அரசுப் பணியாளர்களின் குடியிருப்புக்களைக் கொண்ட இப்பகுதியில் ஏ.டி.எம். இருப்பதால் பணம் அதிக அளவில் புழங்குவதாகச் சொல்லப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று (22/02/2020) இரவு அதிகாலையை நெருங்கும் மூன்று மணியளவில் அந்த ஏ.டி.எம்.மிற்குள் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் அங்குள்ள பணம் வைக்கும் மெஷினை உடைத்துக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

NELLAI DISTRICT ATM MONEY THIEF POLICE ARRESTED

இயந்திரத்தை உடைப்பதற்கு சற்று நேரம் பிடித்ததால், சம்பவம் தொடர்பானது மண்டல ஏ.டி.எம்களைக் கண்காணிக்கும் மும்பையிலுள்ள அதன் கண்ட்ரோலில் மெஷின் உடைப்பு பற்றித் தெரியவர, கண்காணிப்பாளர்கள் உடனே பாளை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து விரைந்து வந்த பாளை போலீசார் சம்பவ இடத்திலேயே கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு நபர்களையும் வளைத்துப் பிடித்தனர். இதனால் ஏ.டிஎம்-யில் வைக்கப்பட்டுள்ள பணம் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது 

NELLAI DISTRICT ATM MONEY THIEF POLICE ARRESTED

பாளை குற்றப் பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமியின் விசாரணையில் அவர்கள் பாளை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரராஜன், மற்றும் முத்து சிதம்பரம் என்கிற விபரம் தெரிய வந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட அவர்களிடம் மேல் விசாரணை நடந்து வருகிறது. மேலும் அந்த இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமிலிருப்பவர்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

 

சார்ந்த செய்திகள்