Skip to main content

'நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய்' - கிருஸ்துவர்களின் நெற்றியில் சாம்பல்!

Published on 27/02/2020 | Edited on 27/02/2020

இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மத மக்களால்  கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு 40 நாட்கள் நோன்பு இருப்பது அவர்களின்  வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று கிருஸ்துவர்களால்  அழைக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. இதன்படி இன்று தவக்காலம் தொடங்கியுள்ளது.

 

Christians Festival

 



இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார். இந்த சாம்பல், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்று அவர்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருந்தவையாகும். அவற்றை சேகரித்து சுட்டு சாம்பலாக்கி நெற்றியில் பூச பயன்படுத்தப்பட்டது. இந்த சாம்பலை நெற்றியில் பூசும்போது மனிதனே நீ  மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைந்தார்.


 

சார்ந்த செய்திகள்