
தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு கழக சட்டத்திட்ட திருத்தக் குழு சார்பில் தென்னிந்திய அளவிலான கேரம் இரட்டையர் பேஸ் கேம் போட்டி பொள்ளாச்சி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் திருமண மண்டபத்தில் கழக சட்டதிட்ட திருத்த குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இப்போட்டியை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.கோவை தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் ஏற்பாட்டில் கழக தீர்மான குழு உறுப்பினர் ஜி ஏ அதிபதி, மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.க.முத்து, எம்.அமுதபாரதி, பொள்ளாச்சி நகர செயலாளர் இரா.நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பொள்ளாச்சி நகர 13வது வார்டு செயலாளர் பூவை செல்வராஜ் வரவேற்புரையில் நடைபெற்றது
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பொள்ளாச்சி நகராட்சி துணைத்தலைவர் எஸ்.கௌதமன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருதராஜ், நகர மன்ற உறுப்பினர்கள் பி.ஏ.செந்தில்குமார், மணிமாலா தென்றல், வட்டப் பிரதிநிதி கரியாம்பட்டி செல்வராஜ், அங்குராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கினர்
நிகழ்ச்சியில் ஆனைமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ஹிமாலயா யுவராஜ், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ் , நகரத் துணைச் செயலாளர் தர்மராஜ் , நகர மன்ற உறுப்பினர்கள் ஸ்வீட் நாகராஜ், சு.தங்கவேல், முன்னாள் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் அவிநாசி கார்த்திக், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரவிந்த் வசந்தராம், வட்டச் செயலாளர் போஜராஜன், கே.வி.பி.விஜயகுமார், முன்னாள் மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சபாரி சாகுல், செந்தில் கணபதி, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் பைக் பாபு, நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், கௌதம், நகர ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் லோகநாதன், ஜெ.சதிஷ், சுதீஷ் ராஜ், ஊத்துக்குளி அரவிந்த் இளைஞரணி தம்பிகள் யுவராஜ், நவீன் , தாஸ் பிரபு, கணேஷ் ,மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதிச்சுற்று போட்டியில் முதல் இடத்தை பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அருண் மற்றும் ரசீது ஆகியோருக்கு ரூ:25,000 மற்றும் கோப்பைகள், இரண்டாம் இடத்தை பிடித்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சசிதரன் மற்றும் ஆஜி ஆகியோருக்கு ரூ:15,000 மற்றும் கோப்பைகள், மூன்றாம் இடத்தை பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கராஜ் மற்றும் கணேசன் ஆகியோருக்கு ரூ:10,000 மற்றும் கோப்பைகள், நான்காம் இடத்தை பிடித்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெரோஸ் மற்றும் அகமது ஆகியோருக்கு ரூ:5000 மற்றும் கோப்பைகள், ஆறுதல் பரிசாக போட்டியாளர்கள் சேட் & சின்னத்தம்பி, பாபு & சிவா, ரமேஷ் & ரஞ்சித், அருள்மொழி & காதர் ஆகிய நான்கு அணிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ: 1000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.