Skip to main content

போர் தந்திரத்தை பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தலாமா? -வாய்ச்சொல் வீரர் என மோடியை சாடுகிறார் பொன்ராஜ்!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020
Can war tactics be revealed in parliament? -Ponraj criticizes Modi

 

“பிரதமர் சொன்னது உண்மையா, பொய்யா?” என்று கேள்வி எழுப்புகிறார், அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் தலைமை வழிகாட்டியான பொன்ராஜ். இந்தியா – சீனா விவகாரத்தில், தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். அவரது ஆதங்கம் இதோ,

 

“இந்திய-சீன படைகளை,  கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் சீனா ஊடுருவிய இடத்திலிருந்து விலக்கிக்கொள்ள நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில்,  30 ஜூன் 2020 அன்று ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்திய இராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் அவர்களுக்கும், தென் சீன சின்ஜியாங் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் லியூ லின் அவர்களுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  LAC எல்லை கோட்டில் இருந்து இரு படைகளும் 3 km இடைப்பகுதியில் யாரும் வரக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த முடிவின்படி,  இந்தியா இதுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த PP-14 என்ற LAC இடத்தில் இருந்து, சீனா-இந்திய பகுதியில் 1 கிமீ ஊடுருவி, மாற்று எல்லைக் கோட்டை போட்டுள்ளது.  அதன்மூலம்,  இந்தியாவின் முன்னிலைப் படையின் டென்ட் LAC-ல் இருந்து 2.4 கிமீ தொலைவிலும்,  சீனா ஊடுருவி போட்ட மாற்று எல்லைக்கோட்டில் இருந்து 1.4 கிமீ தொலைவில் சீனாவின் முன்னிலைப் படையும் இருக்கும் என்று முடிவாகியுள்ளது. எனவே, இந்தியா 1 கிமீ இந்திய பகுதியை சீனாவிடம் விட்டு கொடுத்து இருக்கிறது.

 

இரண்டாவது, PP-15 பகுதியில் சீனா-இந்திய பகுதியில், 3 கிமீ ஊடுருவி ரோடு போட்டு இருக்கிறது, அதில் எந்த மாற்றமும் இல்லை. இங்கு சீனாவின் 1000 இராணுவ வீரர்களை சம அளவில் எதிர்த்து இந்திய இராணுவம் களத்தில் இருக்கிறது.

 

ஹாட்ஸ்பிரிங் பகுதியில் 2-3 கிமீ ஊடுருவி,  1500 சீன இராணுவ வீரர்களை கோக்ரா ஹைட்ஸ் PP-17A என்ற பகுதியில்,  சீனா நிலை நிறுத்தி இருக்கிறது. அந்த இடத்தில் நமது இந்திய இராணுவம் அவர்களை எதிர்த்து நிலை நிறுத்தி இருக்கிறது.

 

பாங்கோங் டிஸோ ஏரி பகுதியில், FINGER-8 மலைத் தொடர் வரை, இதுவரையிலும்,  இந்திய இராணுவம் பல ஆண்டுகளாக, தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. இப்போது, சீனா இராணுவம் 8 கிமீ ஊடுருவி FINGER-4 வரை சீனாவின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது. இப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சீனா இராணுவம் இந்தியாவை FINGURE-2 பின்பு சென்றால்தான்,  FINGER-8 லிருந்து வாபஸ் வாங்குவோம் என்று சொல்லி,  பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

 

சீனா இப்போது 3 பகுதியிலும் ஊடுருவி, இந்தியா இதுவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பகுதிகளில் இருந்து பின்வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

 

இப்படிப்பட்ட சீனாவின் ஊடுருவல் தொடருமானால், 3,488 கிமீ LAC எல்லை முழுவதும் பாகிஸ்தான் LOC-ஐ போல, தொடர் கண்காணிப்பை இந்திய இராணுவம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும், இராணுவத்திற்கு தேவையான கட்டமைப்பு, இராணுவ பலம் அதிகரித்தல் போன்றவையால், ஏற்கனவே இந்தியாவின் பட்ஜெட்டில் கால் பகுதி இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது, இது மென்மேலும் அதிகரிக்கும் என்று  இராணுவ உத்தி கணிப்பாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

 

இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே சரிந்திருந்திருக்கும் நிலையில், கரோனா தாக்கத்தில் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியில் இந்த சூழலை எப்படி மோடி அரசு சமாளிக்கப் போகிறது?

 

MODI

 

பிரதமர் மோடி அரசு, MSME SECTOR- க்கு 3 லட்சம் கோடி கடனுக்கு ஈடாக உத்தரவாதம் கொடுத்தும், பிரதமரின் பேச்சை அல்ல, மத்திய அரசின் உத்தரவாதத்தையே, இந்திய வங்கிகள் நம்ப மறுக்கின்றன.  அவர் உத்தரவாதத்தை ஏற்கவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு,  அவர்களுக்கு வருமானம் வரும் நிலத்தை உத்தரவாதம் கொடுத்து, அடமானப் பத்திரம் கொடுத்தால்தான் கடன் கொடுப்போம் என்று சொல்லும் நிலையில் இருக்கிறது மத்தியில் உள்ள மோடி ஆட்சி. பிரதமரை வங்கிகளே மதிக்கவில்லை எனும் போது, மக்கள் பிரதமரின் பேச்சை எப்படி நம்ப முடியும்?

 

மக்கள் நம்பினால் என்ன,  நம்பாவிட்டால் என்ன,  நாம் சொல்வதுதான் உண்மை என்று பிரதமர், எந்த நாடும் இந்திய எல்லையில் ஊடுருவவில்லை, எந்த நாடும் நம் படை இருந்த இடத்தை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஆனால், நமது இராணுவம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் பின்வாங்கவில்லை.

 

கல்வான் பள்ளத்தாக்கை பிடிப்போம், LAC-ஐ ஆக்கிரமித்து இந்தியாவில் ஊடுருவுவோம் என்று சீன பாராளுமன்றத்தில் சொல்லிவிட்டு வந்தா, சீனா ஆக்கிரமித்தது?

போர் வியூகத்தை ரகசியமாக வைப்பது தான் ஒரு நாட்டின் வல்லமை, தலைமைப் பண்பல்லவா?

1968-ல்,  சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின்னை பிடிப்போம், POK-ஐ பிடிப்போம் என்ற போர் தந்திரத்தை, வியூகத்தை வெளிப்படையாக யாராவது பாராளுமன்றத்தில் சொல்வார்களா?

இன்றைக்கு, இந்த வாய்சொல் வீரர்களின் வெட்டிப் பேச்சால், நம் இந்திய இராணுவம் சீனாவோடு கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தி,  போரை தவிர்ப்பதற்காக 3 இடங்களில் சீனா இராணுவம் ஊடுருவிய இடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

முதலில் பசி, அப்புறம் pandemic. கடைசியில் தான் பகைமாட்சி

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. - திருக்குறள் 734

மிக்க பசியும், ஓயாத நோயும் (வெளியே வந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.” -இவ்வாறு குறிப்பிட்டுள்ளார், வெ.பொன்ராஜ்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார்.