தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வரும் மே 19 ஆம் தேதி சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அவரக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது .

எல்லா கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அவரக்குறிச்சி தொகுதியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மொத்தம் 63 பேர் போட்டியிட இருப்பதாக இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் 68 பேர் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் 5 பேர் வாபஸ் வாங்கியதால் 63 பேர் போட்டியிட இருக்கின்றனர். அதேபோல் ஒட்டப்பிடாரம் தொகுதியில் 15 பேர் போட்டியிடுகிறனர். சூலூரில் கட்சி வேட்பாளர்கள் 6, சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர். திருப்பங்குன்றம் தொகுதியில் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
நான்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 137 பேர் போட்டியிடுகின்றனர்.