Skip to main content

மோடி கொடுத்த இந்த டின்னர் தாங்க எங்களுக்கு லாஸ்ட்.. அதிமுக எம்எல்ஏ கலகலப்பு...

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

இந்தியளவில் நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பு என ஊடகங்கள் வெளியிட்டுள்ள முடிவுபடி இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து டெல்லியில் விருந்து வைபவம் செய்தது. இதில் தமிழகத்திலிருந்து அதிமுகவின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்திய அரசியலில் வட நாட்டு தலைவர்களின் வருகை ஒருபுறம் இருக்க, தென் நாட்டு தலைவர்களின் வருகை என்றால் அதிமுகவை சேர்ந்த ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவர் மட்டுமே என இருந்தது. இன்று பாஜக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு தனது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் விருந்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரிடம், “எப்படி இருக்கிறீர்கள் என கேட்டதோடு, ரிஸல்டுக்கு பிறகு கவலைப்படாதீர்கள் பார்த்துக்கலாம்” என இந்தியில் கூறியிருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர் செல்வம்,  “மோடி ஜீ எங்களை இன்னும் இரண்டு வருடம் கொண்டு செல்ல வேண்டும்” என கூற மோடி ஓபிஎஸ் தலையில் தட்டி வாழ்த்து கூறியிருக்கிறார். அதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்து வைபவம் நடந்தது.
 

modi

 

 

இந்த நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக எம் எல் ஏ நம்மிடம் பேசும்போது “சார், இன்று நடந்தது பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் விருந்துதான். ஆனால், எங்களுக்கு இது லாஸ்ட் டின்னர் காரணம் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கூடிய சூழல் இல்லை இதை தெரிந்துதான் மோடியும் அமித்ஷாவும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸை அழைத்து விருந்து கொடுத்துள்ளார்கள். இந்த விருந்துடன் டெல்லி போக்குவரத்து ஓபிஎஸ்க்கும் ஈபிஎஸ்க்கும் முடிந்துவிட்டது என கலகலவென சிரித்தார். 
 

ashoka hoel

 

இந்த எம்எல்ஏ கூறுவது போல அதிமுக பாஜக கூட்டணி என்பது இந்த தேர்தலின் முடிவுகளை பொறுத்தே இருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பிரதமருடன் காலை உணவு; வான்கடே நோக்கி பிரம்மாண்ட பேரணி

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Breakfast with the Prime Minister; A grand rally towards Wankhede

13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலக கோப்பையை வென்று வாகை சூடியுள்ளது. இந்திய திரும்பியுள்ள இந்திய வீரர்கள்  மாபெரும் பேரணி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்திய நேரப்படி நேற்று சரியாக 1:30 மணிக்கு புறப்பட்ட இந்திய வீரர்கள் காலை 7 மணிக்கு டெல்லி வந்தடைந்தனர். இன்று அவர்கள் தங்கியுள்ள ஐடிசி தனியார் விடுதிக்கு பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் ,10:00 மணிக்கு மேலாக விடுதியில் இருந்து புறப்பட்டு பிரதமரை நேரில் சந்திக்க  இருக்கின்றனர். அவருடன் காலை உணவு அருந்திய பின்பு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வாழ்த்துக்கள் பகிரப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மதியம் 4 மணி அளவில் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டு மாலை 5 மணிக்கு வெற்றிப் பேரணி நடைபெற இருக்கிறது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற பொழுது தோனி தலைமையிலான கிரிக்கெட் வீரர்கள் கோப்பை எடுத்துச் சென்று வான்கடே மைதானத்தில் வெற்றிவிழா கொண்டாடினார்களோ அதேபோன்று பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து மணிக்கு மும்பையில் இருக்கும் மரைன் பகுதியிலிருந்து தொடங்கும் இந்த பேரணி வான்கடே மைதானம் வரை கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற இருக்கிறது. அதன் பிறகு வான்கடே மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் ஏற்கனவே அறிவித்தபடி இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 125 கோடி ரூபாய் பரிசுத் தொகை மற்றும் பாராட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Next Story

'மக்களின் கவலைகளைத் தெரிவிக்கும் உரிமை எனக்கு உண்டு' - ராகுல் காந்தி கடிதம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'I have the right to express people's concerns' - Rahul Gandhi letter

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'எனது உரையிலிருந்து சில பகுதிகளில் நீக்கியது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சனைகளை அவையில் எழுப்ப வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களின் கடமை. எனவே மக்களுடைய கவலைகளை அவையில் தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. ஆகவே எனது உரையில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் அவைக்குறிப்பில் சேர்க்க வேண்டும்' என வலியுறுத்தி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.