Skip to main content

முதலில் உசுப்பியதே பாண்டவர் அணிதான்- நாசர் பேட்டி!

Published on 23/06/2019 | Edited on 23/06/2019

நடைபெற்று வரும் நடிகர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவுக்குப் பிறகு பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாசர் செய்தியாளர்களைச் சந்தித்தார்,

மூன்றாண்டுகளுக்கு முன்பு 2016ல் இதே இடத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடந்தது. இப்பொழுது நாங்கள் பாண்டவர் அணியினர் என தைரியமாக சொல்லிக்கொள்ளலாம். தேர்தல் முடிந்த பிறகு பாண்டவர் அணி எனும் அடையாளத்தை வைத்துக் கொள்வதில் பெருமை.  

actor nasser interview!


எல்லாருக்கும் பொதுவான ஒரு வேலையை தான் நாங்கள் செய்துகொண்டு வந்தோம். முதலில் இந்த எலக்சன் நடக்க வேண்டும் என்று கொண்டுவந்ததே பாண்டவர் அணி தான். இவ்வளவு பெரிய சங்கத்தில் ஒரு 3000 பேர் இருக்கின்ற இந்த சங்கத்தில் எத்தனை முறை தேர்தல் நடைபெற்றது என்று நிறைய பேருக்கு தெரியாது. எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. எல்லோருக்கும் இந்த கடமை இருக்கிறது என்று  உசுப்பிவிட்டது பாண்டவர் அணி தான். சட்டப்படி மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடக்க வேண்டிய என்ற பெயரில் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

ஆறு மாதம் கடந்ததற்கான காரணங்கள் எல்லாம் சொல்லியாச்சு. மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர் அணி செய்த வேலைகளை வைத்து கட்டிடங்கள் எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிற வேலைகள்,  உறுப்பினர்களுக்கு பல விஷயங்கள் செய்தது இதெல்லாம் பாண்டவர் அணிக்கு ஆதரவாக இருக்கும் என்று நினைக்கிறேன். மறுபடியும்  திரும்பி வருவேன். நாள் முழுக்க இங்கே தான் இருப்பேன். இப்போதைக்கு இது போதும் என்று நினைக்கிறேன் என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.