Skip to main content

கிரடாய் அமைப்பு சார்பில் 3 நாட்கள் வீடுகள் கண்காட்சி

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

3 days house exhibition organized by credai organization

 

திருச்சி கிரடாய் அமைப்பு சார்பில் ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் வீடுகளின் கண்காட்சி  ஆகஸ்ட்13 ஆம் தேதி தொடங்கி 3 நாட்கள் திருச்சியில் நடைபெற உள்ளது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் கட்டுமானத் துறையில் கிரடாய் (இந்திய கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பு) முக்கிய அங்கமாக உள்ளது.

 

அனைத்து வகையான மக்களுக்கும் சிறப்பான முறையில் வீடுகளை கட்டித் தருவதற்காக 1999-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதில், இந்திய அளவில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் ஒரு அங்கமான திருச்சி கிரடாய் சார்பில் திருச்சியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் வீடுகளின் கண்காட்சி, தற்போது 7-வது ஆண்டாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ‘ஃபேர்ப்ரோ-2022 என்ற பெயரில் ஆகஸ்டு 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 

 

திருச்சி கிரடாய் அமைப்பு குறித்து அதன் தலைவர் ஆர்.எஸ்.ரவி கூறியதாவது, “மக்களுக்கு வீடுகள் குறித்த தொழில்நுட்ப விழிப்புணர்வை உருவாக்குதல், சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த வீட்டில் செய்ய வேண்டிய வழிமுறைகள், கட்டிடத்தின் பரப்பளவைக் கணக்கிடுதல், இடத்தின் சட்டப்பூர்வ ஆவணங்களை ஆராய்தல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுதல் போன்றவையே கிரடாய் அமைப்பின் முக்கிய நோக்கம்.  சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் 9  இடங்களில் கிரடாய் அமைப்பு உள்ளது.

 

இதில், எங்களது திருச்சி அமைப்பில் 50க்கும் மேற்பட்ட  நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் அனைவரும், இந்த அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ள நடத்தைக் குறியீடு (Code Of Conduct), வெளிப்படைத் தன்மை, நேர்மை ஆகியவற்றைப் பின்பற்றுவார்கள். ஒவ்வொரு மீட்டிங்கின் போதும் இதை உறுப்பினர்களிடம் வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.  அதனால், எங்களால் வீடுகள் தரமானதாகவும், உரிய நேரத்திலும் கட்டித் தரப்படுகின்றன.  வாடிக்கையாளர்களுக்கு வீடுகள் தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு, எங்கள் அமைப்பில் புகார் தெரிவித்தால் அதற்கு தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கிறோம். 

 

இதன் மூலம் வீடு வாங்குபவர்களும் பாதுகாப்பாக உணர்வார்கள்.  மேலும், அரசு புதிய விதிமுறைகளை வகுக்கும்போது, எங்களது தேசிய மற்றும் மாநில அமைப்புகள் மூலமாக உடனடியாக எங்களுக்கு தெரியவந்துவிடும். அதை உடனடியாக நாங்கள் அமல்படுத்துவதுடன், எங்களது உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி, மக்களுக்கும் கொண்டு சேர்த்துவிடுகிறோம்.  மானியத்துடன் அரசு அறிவிக்கும் வீடு கட்டுவதற்கான திட்டங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம். அத்திட்டத்தில் உள்ள வட்டி வீதம், சிறப்பு சலுகைகள் குறித்து வங்கிகளிடம் கேட்டறிந்து வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கிறோம். அரசுத் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாகவே செயல்படுகிறோம்.  மேலும், கட்டுமான தொழிலில் உள்ள எங்களது கோரிக்கைகள் தொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி அவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம்.

 

வழக்கமான 80-சி பிரிவின் கீழ் கிடைக்கும் சலுகைகளும் பொருந்தும். நடைமுறைக்கு வந்துள்ள ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வருங்காலங்களில் நிச்சயம் வீடுகளின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கும். அதே சமயம்  குறைந்த வட்டி விகிதம், வங்கிகளின் சலுகைகள், மத்திய அரசின் மானியம் உள்ளிட்ட பல்வேறு சாதகமான சூழ்நிலைகளால் சொந்த வீடு வாங்குவதற்கு இதுவே சரியான தருணம். அதற்கான வாய்ப்பை கிரடாய் திருச்சி 3 நாட்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது.  இதன் மூலம் குறைந்த விலையில் தரமான நம்பிக்கையான வீடுகள் வாங்குவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

 

திருச்சி கிரடாயின் சேர்மன் வி. கோபிநாதன் கூறியதாவது, “7-வது ஆண்டாக நடைபெறும் இக்கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை 30 நிறுவனத்தினர் காட்சிப்படுத்த உள்ளனர். எங்களுக்கு வீடுகளை விற்பதற்கு இணையதளம், செய்தித்தாள், விளம்பரம் என பல வழிகள் உள்ளன. ஆனால், வீடு வாங்குபவர்களுக்கு எங்கு வீடுகள் உள்ளன? யாரிடம் வாங்குவது என தெரியாது. எனவே, வாடிக்கையாளர்களுக்கான சேவையாகத் தான் இக்கண்காட்சியை நடத்துகிறோம்.

 

கிரடாய் அமைப்பில் அனைத்து சேவைகளும் ஒரே கூரையின் கீழ் இருப்பதால், என்ன விலையில், எங்கு வீடு வாங்கலாம் என்பதை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் எங்கள் கண்காட்சியில் உள்ளன. வங்கியில் கடன் கேட்டு கிடைக்குமா என தெரியாமல் காத்திருப்பதைவிட இக்கண்காட்சியில் வீடு வாங்க குறைந்த வட்டிவீதத்தில் வங்கி கடனுதவியை எளிதாக பெற முடியும். 

 

மேலும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ள வீடுகள் அனைத்தும் வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. இதற்காக 5 வங்கிகள் இங்கு முகாமிட்டுள்ளன. அவர்களிடம் உங்களது வருமானத்தின் அடிப்படையில் கடனுதவி பற்றி கேட்டுவிட்டு, பின்னர் வீடு வாங்குவதற்கான பட்ஜெட்டை தயார் செய்யலாம். வீடு வாங்குபவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும்.

 

இந்த கண்காட்சியில் வீடு வாங்குபவர்களுக்கு எங்களது உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றனர். முறையான கட்டிட அனுமதி, தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வீடுகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இங்கு தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை உடன் குடிபுகும் நிலையிலும், சில மாதங்களில் முடிவுறும் நிலையிலும் உள்ளன” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.