Published on 22/05/2025 | Edited on 22/05/2025

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டாபிராமபுரம் ஊராட்சியில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்படுவதற்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. டாஸ்மாக் கடைக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு சில நாட்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் பாமக கட்சியைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். இந்நிலையில் திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில் சுமார் நூற்றுக்கும் போலீசார் பாதுகாப்புடன் டாஸ்மாக் கடையானது திறக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் போக்குவரத்து சீர் செய்யும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் பாதுகாப்புடன் குடிமகன்கள் மது வாங்கிச் செல்கின்றனர்.