Skip to main content

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல்! காங்கிரஸின் பொது வேட்பாளர் கான்செப்டை எதிர்க்கட்சிகள் ஏற்குமா?

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
rrr

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் அதிகபட்சம் 18 நாட்கள் நடக்கும். கடந்த 1 வருடமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருக்கும் நிலையில் அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை எழுப்பியபடி இருந்தன. 

இந்த நிலையில், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த முடிவு செய்து அறிவித்தது மத்திய அரசு. அதனால் கூட்டத்தொடரின் முதல்நாள் இதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்படுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் சார்பாக முன்னாள் துணை சபாநாயக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஹரிவன்ஷ் நாராயண்சிங்கை மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இவரை எதிர்த்து, எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த விரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுகவின் திருச்சி சிவாவை நிறுத்தும் யோசனையை தெரிவித்திருந்தார். 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேசினர். திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜியிடம் சோனியாவே பேசினார். ஆனால் காங்கிரஸ் எடுத்த அத்தகைய முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், திருச்சி சிவாவுக்கு பதிலாக,  ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜாவை நிறுத்த காங்கிரஸ் முயற்சி எடுத்துள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்படும் ஹரிவன்ஷ் நாராயண் பீகார்காரர் என்பதால், அதே பீகாரை சேர்ந்த மனோஜ்ஜாவை நிறுத்தினால் போட்டி அதிகரிக்கும் என கணக்குப் போட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கும் இன்று காலை வரை எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.

இதனால், பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் என்கிற காங்கிரசின் கான்செப்ட்  முழு வடிவம் பெறுமா, பெறாதா என்கிற கேள்வியால் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் முதல்நாள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.  

ராஜ்யசபாவுக்கான துணை தலைவர் தேர்தல் பரபரப்பு இப்படி இருக்கும் நிலையில், லோக்சபாவுக்கான துணை தலைவர் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்கிற கேள்வியும் டெல்லியில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்சபா தலைவர் ஓம்பிர்லா, “கொரோனா நெருக்கடியில் கூட்டத்தொடரை நடத்துவதே பெரிய சவாலான விஷயம். அதேசமயம், லோக்சபாவுக்கான துணை சபாநாயகரை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு செய்யும்” என்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.