Skip to main content

எடப்பாடி அரசுக்கு தலைமேல் தொங்கும் அடுத்த கத்தி !

Published on 27/02/2018 | Edited on 27/02/2018
edappadi1

 

தமிழக சட்டமன்றத்தில் 2017 ஆம்  ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி  சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு எதிராக வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் பன்னிர்செல்வம் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தினகரன் ஆதரவு வெற்றிவேல் உள்ளிட்ட தகுதி நீக்கம் செய்யப்பட்ட  நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

 

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏ.-க்கள் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், இன்று மனுதாரர்கள் தரப்பிலான இறுதி வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

 

திமுக கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி "சபாநாயகர் தன் அரசியல் சாசன கடமையை செய்யத் தவறினால், அதை நீதிமன்றம் தன் அரசியல்சாசன கடமையை செய்ய வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என இந்த நீதிமன்றத்தில் கூறி விட்டு தேர்தல் ஆணையத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறியது நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதற்கு சமமாக கருத வேண்டும்.

 

தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்  தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக புகார் அளித்த நாளிலேயே விளக்கம் கேட்டு  நோட்டீஸ் அனுப்பியதை  சபாநாயகர் எப்படி நியாயப்படுத்த முடியாது. சபாநாயகர் சட்டப்பேரவை தலைவராக செயல்படாமல் கட்சி சார்ந்து தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்பதையே வெளிகாட்டுகிறது. எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்" என வாதிட்டார். 

 

அதன் பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் தரப்பில்  மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் "கட்சி சார்பில் அறிவிக்கப்படும் முடிவுகள் என்பது அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும். அதன்படி கொறடா உத்தரவு என்பது அனைத்து  சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  பொருந்தும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தகுதி நீக்கம் கோரிய புகார் குறித்து முடிவெடுக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிட இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பி .எஸ். அணியினர் தெரிவித்ததை மட்டும் கணக்கில் கொண்டு அவர்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' என வாதிட்டார்.

 

இதனையடுத்து மனுதாரர்கள் , எதிர் மனுதாரர்கள் தரப்பிலான அனைத்து  வாதங்களும் முடிவடைந்தது.  எழுத்துபூர்வமான வாதங்கள தாக்கல் செய்ய அனைத்து தரப்பினரும்  அவகாசம் கேட்டதை  ஏற்ற நீதிபதிகள், மார்ச் 5ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருநங்கைகளை ‘சாதி’யாக வகைப்படுத்திய அரசு; சர்ச்சையைக் கிளப்பிய சாதிவாரி கணக்கெடுப்பு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

Bihar government classified third genders as caste code  census

 

இந்தியாவில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சில காரணங்களுக்காக நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், பீகாரில் முதல்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கடந்த ஜூலை மாதம் பீகாரில் இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்கப்பட்ட நிலையில், முதல்வர் நிதிஷ்குமார் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டிருந்தார். 

 

இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த கணக்கெடுப்பு முதற்கட்ட பணி ஏற்கனவே முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் கட்ட பணிகள் இந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கி அடுத்த(மே) மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.  அதன்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் உட்பிரிவுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அதனால் சாதியில் எத்தனை உட்பிரிவு இருந்தாலும், அவர்கள் அனைவரும் அந்த சாதிக்கு ஒதுக்கப்பட்ட எண்ணில்தான் கணக்கிடப்படுகிறார்கள். 

 

இந்த நிலையில் மூன்றாம் பாலினத்தவரான திருநங்கைகளை சாதிவாரி கணக்கெடுப்பில் ஒரு சாதி என்று வகைப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த கணக்கெடுப்பில் அவர்களுக்கு 22 என்ற எண்ணானது ஒதுக்கப்பட்டு அதற்குள் அவர்களை உள்ளடக்கியுள்ளனர். இதற்கு பீகாரில் உள்ள சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 

 

Next Story

பழைய பென்சன் திட்டம்: பரவும் போலிச் செய்தியும் அறியப்பட்ட உண்மையும்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

The Old Benson Project: Spreading Fake News and Known Truth

 

பழைய பென்சன் திட்டத்தில் சேர விரும்புபவர்களின் பட்டியலை நிதித்துறை சேகரிப்பதாகவும் அதற்கான சர்க்குலர் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரபரப்பாக பரவி வருகிறது. ஆனால் நிதித்துறையின் அந்த சர்க்குலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. 

 

பழைய ஓய்வூதிய திட்டத்தில் தற்காலிகப் பணியாளராக அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் அவர்கள் நிரந்தரப்படுத்தப்பட்டனர். அப்படி நிரந்தரப்படுத்தப்படும்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. அந்த வகையில் நிரந்தரப்படுத்தப்பட்ட ஊழியர்கள் பலர் ஓய்வு பெறுகிறார்கள். அப்போது அவர்கள், "பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருக்கும்போதே நாங்கள் பணியில் சேர்ந்துவிட்டோம். அதனால் எங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் படிதான் பென்சன் வழங்க வேண்டும்" என நீதிமன்றத்தை அணுகினர். 

 

நீதிமன்றமும் இவர்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பலருக்கும் பழைய பென்சன் திட்டத்தில் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதிரி பலரின் வழக்குகள் நிலுவையிலும் இருந்து வருகிறது. இதன் டேட்டாக்களைத் தான் துறை வாரியாக அனுப்பி வைக்கும்படி நிதித்துறை சர்க்குலர் அனுப்பியுள்ளது. மற்றபடி பழைய பென்சன் திட்டத்தில் சேர்பவர்களின் விருப்பப் பட்டியலை நிதித்துறை திரட்டவில்லை.