Skip to main content

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியில் முதலிடத்தில் இருப்பது இவர்தான்...

Published on 27/09/2019 | Edited on 28/09/2019

 

வரும் அக்டோபர் 21ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

nanguneri



இதையடுத்து விக்கிவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், நாங்குநேரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் திமுக தலைமை அறிவித்தது. மேலும் விக்கிரவாண்டி திமுக வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என்றும் அறிவித்தது. காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதை டெல்லி மேலிடம்தான் அறிவிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

இதற்கிடையே போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்தவர்களில் குமரி அனந்தன், ரூபி மனோகரன், ஊர்வசி அமிர்தராஜ் ஆகிய 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், இந்தப் போட்டியில் ஊர்வசி அமிர்தராஜ் முதலிடத்தில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 

நாங்குநேரி தொகுதியில் நெல்லை புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளராக உள்ள ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்தது. இதையடுத்து அவர், அதிமுக ஒருங்கிணைப்பார் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று, இன்று தனது தொகுதிக்கு சென்று பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்