Skip to main content

“அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டர் தான் இ.பி.எஸ்” - அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published on 19/01/2025 | Edited on 19/01/2025
Minister Senthil Balaji says The character of Amavasai in EPS  

அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசை கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும் - அமைதிப்படை படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் அமாவாசை கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது என நேற்று பேசியிருக்கிறார்.

ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி. 2024ஆம் வருடம் சட்டசபைக்கும் தேர்தல் வரும். இன்னும் 27 அமாவாசைகள் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சராக இருக்க முடியும். மீண்டும் அதிமுக அரசு தமிழகத்தில் அமையும் என 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி சேலம், தாரமங்கலத்தில் பேச்சு. இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என  2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு.

திமுக ஆட்சியின் ஆயுட் காலம் 19 அமாவாசைகள் தான். நாட்கள் எண்ணப்படுகின்றன என 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வலைத்தளத்தில் பதிவு. இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23ஆம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பெளர்ணமிகளுக்கு மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராக தொடர்வார் என்பதை 2026இல் உணர்ந்து கொள்வார்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்