ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது வரும் 2030ஆம் ஆண்டு ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நடைபெற இருக்கிறது. . இந்த நிலையில், தங்கள் நாட்டிலுள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில் மொராக்கோ நாடு இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கொடிய ரசாயனமான ஸ்டிரைக்னைன் மூலம் நாய்களுக்கு விஷம் கொடுத்தும், சுட்டும் அல்லது பிடிக்கப்பட்டு இறைச்சி கூடங்களுக்கு அனுப்பி கொல்லப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 30 லட்சம் நாய்கள் கொல்ல திட்டமிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சிக்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதே போல், புகழ்பெற்ற விலங்கு உரிமைகள் வழக்கறிஞரான ஜேன் குடால், இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும் என சர்வதேச கால்பந்து சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கால்பந்தாட்டத்திற்கான உலகளாவிய நிர்வாகக் குழுவான ஃபிஃபா (FIFA), மொராக்கோவின் நடவடிக்கை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான கருத்தை வெளியிடவில்லை. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒட்டி, ஸ்பெயின், போர்ச்சுகல், மொரோக்கோ ஆகிய நாடுகளுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்காக தெருநாய்களை கொல்லும் முயற்சியில் மொராக்கோ இறங்கியிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.