தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வரும் நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரமும் அனல் பறந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு, எடமலைப்பட்டி புதூர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
எடமலைப்பட்டி புதூர் 40வது வார்டு திமுக பகுதி திமுக செயலாளராக இருக்கும் முத்துச்செல்வம் மற்றும் 39-வது வார்டு பகுதி திமுக செயலாளராக இருக்கும் கவிதா ஆகிய இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
கே.என்.நேரு, வாக்கு சேகரிப்பின்போது சம்பந்தப்பட்ட வார்டு பகுதிகளில் யார் அதிகமான ஆட்களை கூட்டி வருகிறோம் என்பதில் அந்த இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஆரம்பித்து, அதன் பின் தள்ளுமுள்ளு நடந்து இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை அறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கே.என். நேரு, இருவரையும் அழைத்து பேசி சமாதானம் செய்து வைத்தார். பின் 40வது வார்டு பகுதி திமுக செயலாளர் முத்து செல்வத்தை நேரு தன்னுடன் அழைத்துச் சென்றார்.