Skip to main content

கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து பலியான குழந்தை; பள்ளியே பொறுப்பேற்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
Selvaperundagai condemns about incident happened to child fall down in sewage tank

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி கழிவுநீர்த் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை காட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி கழிவுநீர் தொட்டி விழுந்து உயிரிழந்துள்ள செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். 

எல்.கே.ஜி படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமையாகும். குழந்தையின் இறப்பிற்கு தனியார் பள்ளி முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரும்பதகாத சம்பவம் ஏற்படுத்திய பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்